தனது 37 ஆவது பிறந்த நாளை 2 கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் ஆரம்பித்துள்ளார் தல தோனி. இன்றைய நாள் முழுவதும் இந்த வீடியோ தான் சமூகவலைத்தளங்களில் வைரல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரு நபருக்கு இத்தனை அடைமொழிகள் சாத்தியமா? என்றால் அது தோனிக்கு மட்டுமே பொருந்தும். தல தோனி, மிஸ்டர் கூல், கேப்டன் கூல், மஹி, கிங் மேக்கர், எங்க தல தோனி, ஃபெஸ்ட் ஃபினிஷர், என கிரிக்கெட் ரசிகர்களால் ஏகப்பட்ட செல்லப்பெயர்களுடன் அழைப்படும் இந்திய கிரிக்கெட் அணிஹ்யின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 37 ஆவது பிறந்த நாள்.
ராஞ்சியில் பிறந்து, கிரிக்கெட் கனவுகளை சுமந்து, டிடிஆராக பணிப்புரிந்து வாழ்க்கையில் படிபடிப்பாக முன்னேறி இந்திய கிர்க்கெட் அணிக்கே கேப்டனாக மாறி தோனியை ரசிகர்கள் எந்த நேரத்திலும் கொண்டாட தவறியதில்லை. வெற்ற்- தோல்வி இரண்டிலும் அவரின் பக்கம் நின்ற அதே ரசிகர்கள் தான் இன்று அவரின் பிறந்த நாளையும் சமூகவலைத்தளங்களில் அதகளப்படுத்தி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதில் தொடங்கி சக வீரர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கி அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து, தோல்வியின் போது அணிக்கு முன்னால் நின்று, வெற்றியின் போது அணிக்கு பின்னால் நின்று ஒட்டுமொத்த கிர்க்கெட் ரசிகர்களின் இதயத்திலும் தனி ஒருவனாக நிற்கும் தோனி எப்போதுமே எல்லோருக்குமே ஸ்பெஷல் தான்.
இந்த வருடம் தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கிலாந்தில் தான். இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டி தோனிக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இது தோனிக்கு 500-வது சர்வதேசப் போட்டியாகும்.
கேப்டன் கூல் பிறந்த நாளை ஜோராக கொண்டாட இந்திய அணி வீரர்கள் கேக்குடன் தோனியிடம் சென்றனர். தனது கணவனின் பிறந்த நாளுக்கு காதல் மனைவி சாக்ஷியும் கேக்குடன் காத்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு கேக்குகளில் தோனி எந்த கேக்கை வெட்டினார் என்பது தான் ஹலைட். செல்ல மகள் ஜிவா வெட்ட சொன்ன கேக்கை தான் தோனி வெட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.