ஸ்ரீசாந்த் மகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை... இதயம் நொறுங்கிய ஹர்பஜன்

ஸ்ரீசாந்த்தை அறைந்தது தொடர்பாக அவரது மகள் கேட்ட அந்த வார்த்தை தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக அஸ்வின் உடனான உரையாடலின் போது ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த்தை அறைந்தது தொடர்பாக அவரது மகள் கேட்ட அந்த வார்த்தை தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக அஸ்வின் உடனான உரையாடலின் போது ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Harbhajan Singh remembers emotional conversation with Sreesanths daughter Tamil News

"ஹர்பஜன் உடன் எனக்கு இருந்த உறவின் காரணமாகவும், அன்பின் காரணமுமாகவுமே அழுதேன்" என்று ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார்.

ஐ.பி.எல் தொடருக்கான முதல் சீசன் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 18-வயதாகும் இந்த தொடரில் ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறியுள்ளன. பரபர ஆட்டத்துக்கு மத்தியில், களத்தில் வீரர்களுக்கு இடையே சூடான வார்த்தைப் போர் முதல் முட்டல்கள் மோதல்கள் வரை என பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் மறந்து விட முடியாத சம்பவமாக ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் மோதல் பார்க்கப்படுகிறது. 

Advertisment

இந்த இரு முன்னணி வீரர்களும் 2007-ல் தொடக்க டி-20 உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். இருவருமே தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். அதே உத்வேகத்துடன் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றனர். ஆனாலும் இருவரும் வெவேறு அணிகளில் இடம் பிடித்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஸ்ரீசாந்த்-தும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங்கும் ஆடினர். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ஸ்ரீசாந்துக்கும் - ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே திடீரென உரசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். துடித்துப் போன ஸ்ரீசாந்த் களத்தில் அழுதத் தொடங்கினார். இது போட்டியை நேரலையில் பார்த்த ரசிகர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.  

Advertisment
Advertisements

இதனையடுத்து, ஸ்ரீசாந்த்தை சக வீரரான ஹர்பஜன் சிங் அறைந்ததற்காக, ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக மனம் திறந்து பேசிய ஹர்பஜன் சிங், “அன்று நடைபெற்ற சம்பவம் மிகவும் தவறான ஒன்று. என்னுடைய தவறால் சக வீரர் ஒருவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் கிரிக்கெட் வாழ்வில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால் அது ஒன்று தான். அதாவது நான் களத்தில் ஸ்ரீசாந்தை நடத்திய விதத்தை நிச்சயம் மாற்றி இருக்க வேண்டும். அன்று அந்த சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அதை தற்போது நினைத்தால் எனக்கு நன்றாக புரிய வந்துள்ளது” என்று கூறியிருந்தார். 

இதேபோல், ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பாக ஸ்ரீசாந்த் பேசுகையில், “இந்த பிரச்சினை எப்போதே முடிந்துவிட்டது. அப்போதே சச்சின் எங்கள் இருவரையும் அழைத்து இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்திருந்தார். அவர் எப்போது எனக்கு ஒரு மூத்த சகோதரரை போன்ற ஒருவர்.  இந்த சம்பவத்தின் போது அவர் பார்த்த விதம் வேறு. அவர் என்னிடம் பல முறை இந்த சம்பவத்திற்காக வருந்தியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். 

மேலும் இதுபற்றி மற்றொரு நேர்காணலில் ஸ்ரீசாந்த், அந்த சம்பவத்திற்குப் பின் இருவரும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டதாகவும், அந்த சம்பவத்திற்காக ஹர்பஜன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஐ.பி.எல் நிர்வாகத்திடம் கெஞ்சியதாகவும் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். இதேபோல், வேறொரு பேட்டியில் ஸ்ரீசாந்த் பேசுகையில் “அந்த சம்பவம் நடந்தபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். வலியால் நான் அழவில்லை, ஆனால் மனதால் அழுதேன். அவர் அப்படி செய்வார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, அதற்குமுன் ஹர்பஜன் உடன் எனக்கு இருந்த உறவின் காரணமாகவும், அன்பின் காரணமுமாகவுமே அழுதேன்" என்று தெரிவித்திருந்தார். 

இதயம் நொறுங்கிய ஹர்பஜன்

இந்நிலையில், ஸ்ரீசாந்த்தை அறைந்தது தொடர்பாக அவரது மகள் கேட்ட அந்த வார்த்தை தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக அஸ்வின் உடனான உரையாடலின் போது ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அஸ்வின் யூடியூப் சேனலில் ஹர்பஜன் சிங் பேசுகையில், “என் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டும் என்றால், அது ஸ்ரீசாந்துடன் நடந்த சண்டைதான். பல ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. 

நான் ஸ்ரீசாந்தின் மகளிடம் மிகவும் அன்போடு பேசிக்கொண்டிருந்தபோது. அவள் ‘நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. நீங்கள்தான் என் அப்பாவை அடித்தீர்கள்’ என்றாள். அந்த வார்த்தைகள் என் இதயத்தை நொறுக்கின. நான் கண்ணீரை அடக்க முடியாத நிலைக்குச் சென்றேன். என் மீதான அவளது அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவள் என்னை ஒரு கெட்ட மனிதனாகவே பார்க்கிறாளோ? ‘என் அப்பாவை அடித்தவன்’ என்றே நினைக்கிறாளோ? நான் அவ்வளவு மோசமாக உணர்ந்தேன். 

இன்று வரை, நானே எதையும் சரிசெய்ய முடியாமல் இருப்பதற்காக அவளிடம் மனமாற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவள் வளர்ந்தபின் என்னை அதே பார்வையில் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் அவளுடைய அங்கிள் (ஹர்பஜன்) எப்போதும் அவளுடன் இருப்பார் என்றும், அவரால் முடிந்த எந்த விதமான ஆதரவையும் கொடுப்பார் என்றும் அவள் நினைக்க வேண்டும். அதனால்தான் நான் அந்த அத்தியாயத்தை நீக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். 

Harbhajan Singh Sreesanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: