Advertisment

'அவரால் மட்டுமே வெற்றி வந்துவிடவில்லை': தோனி ரசிகருக்கு பாடம் எடுத்த ஹர்பஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், சமூகவலைதளங்களில் ரசிகர்கள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்

author-image
WebDesk
New Update
 Harbhajan Singh schools MS Dhoni fan for glorifying individual over team Tamil News

Harbhajan Singh took a fan to task when he implied that MS Dhoni had won the T20 World Cup and defeated Australia on his own.

 World Test Championship final 2023 -  Harbhajan Singh - MS Dhoni Tamil News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கி (ஜூன் 7) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வாகை சூடியது. இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் கடந்த 10 ஆண்டுகால சோகம் இன்னும் நீள்கிறது.

Advertisment

இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வென்றதில்லை என்ற நீண்ட ஆண்டுகால சோகம் தொடர்கிறது. இந்நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 2007 உலகக்கோப்பை வெற்றியைக் குறிப்பிட்ட ஒரு ரசிகர், 'அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் ஆடுவதற்கே முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே கொண்டு முன்னணி அணியான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி, கேப்டனாக ஆன 48 நாட்களில் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.' என அந்த பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி ஹர்பஜன் சிங் பதிவிட்டிருக்கும் பதில் ட்வீட்டில், 'ஆம், இந்த இளம் வீரர் தன்னந்தனியாக ஆடிதான் உலகக்கோப்பையை வென்றார். அணியிலிருந்த மற்ற 10 வீரர்களும் ஆடவே இல்லை. எவ்வளவு பெரிய முரண் இது?

ஆஸ்திரேலியாவோ அல்லது வேறு சில நாடுகளோ உலகக்கோப்பையை வெல்லும்போது, ஆஸ்திரேலிய நாடு உலகக்கோப்பையை வென்றதாக செய்தி எழுதுவார்கள். ஆனால், இந்தியா உலகக்கோப்பையை வென்றால் கேப்டன்தான் வென்றார் என எழுதுவார்கள். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. இங்கே குழுவாகத்தான் வெற்றி தோல்விகளை எட்ட வேண்டும்.' என பதிலளித்திருந்தார்.

இதே போன்ற கருத்தை தான் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீரும் பேசி இருந்தார். இது தொடர்பாக நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில், கவுதம் கம்பீர், 'நம் நாடு ஒரு குழு வெறி கொண்ட நாடு அல்ல, மாறாக தனி நபர் வெறி கொண்ட நாடு. சில நபர்கள் அணியை விட பெரியவர்கள் என்று நினைக்கிறோம். இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளில் எந்த ஒரு தனிநபரையும் விட அணி பெரியது. இந்திய கிரிக்கெட்டின் பங்குதாரர்கள், ஒளிபரப்பாளர்கள் முதல் ஊடகங்கள் வரை, துரதிர்ஷ்டவசமாக PR நிறுவனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாள் முழுவதும் 3 நபர்களை மட்டுமே காண்பிப்பார்கள். நீங்க 50 பண்ணிட்டு நானும் 50 பண்றேன்னு ஒருத்தரை காட்டிக்கிட்டே இருந்தா எல்லாரும் அவங்கதான் நட்சத்திரம்னு நினைச்சாங்க. மற்ற நபர் குறைத்து மதிப்பிடப்படுவார்.

ஒரு வீரரை குறைத்து மதிப்பிடுவது யார்? ஒளிபரப்பாளர்கள் செய்கிறார்கள், நிபுணர்கள் செய்கிறார்கள் மற்றும் சமூக ஊடகங்கள் செய்கின்றன. நீங்கள் ஒரு வீரரின் செயல்திறனைப் பற்றி பேசினால், மற்றொன்று தானாகவே குறைத்து மதிப்பிடப்படும். இருவரும் சமமாக ஒட்டியுள்ளனர். ஆனால் ஒருவரின் செயல்திறன் வரவு வைக்கப்படவில்லை என்றால், அவர்/அவள் எப்போதும் குறைவாக மதிப்பிடப்படுவார். தனிநபர்கள் மீதான இந்த ஆவேசமே நீண்ட காலமாக இந்தியா எந்த பெரிய ஐசிசி கோப்பையையும் வெல்லாமல் இருப்பதற்கு காரணம்.

1983 உலகக்கோப்பையின் அரையிறுதியிலும், இறுதிப் போட்டியிலும் மொகிந்தர் அமர்நாத் தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். ஆனால், கபில்தேவ் உலகக்கோப்பையை தூக்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம்தான் நமக்கு காட்டப்படுகிறது. அதுதான் நம்முடைய மனதிலும் பதிந்திருக்கிறது' எனக் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gautam Gambhir Cricket Sports India Vs Australia Ms Dhoni Indian Cricket Harbhajan Singh World Test Championship Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment