Advertisment

'அவருக்கு மனநிலை சரியில்லை': முன்னாள் பாக்., வீரருக்கு ஹர்பஜன் பதிலடி

"யாராவது இன்சமாமை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. அவர் மனநிலை சரியில்லை." என்று இன்சமாம் உல் ஹக் கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடியும் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Harbhajan Singh slams Inzamam ul Haq comments on conversion Tamil News

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது பாகிஸ்தான் தோல்வியுற்றபோது எழுந்த 'ஜெய் ஶ்ரீராம்' முழக்கங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன.

Harbhajan-singh | inzamam-ul-haq: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன. 

Advertisment

இந்த உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பையில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை கொல்கத்தாவில் நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. 

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் சில சர்ச்சைகள் வெடித்துப் பேசுபொருளாகியிருந்தன. அதில் குறிப்பாக, குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது பாகிஸ்தான் தோல்வியுற்றபோது எழுந்த 'ஜெய் ஶ்ரீராம்' முழக்கங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன. 

இன்சமாம் சர்ச்சை 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இன்சமாம் உல் ஹக் நேர்காணல் ஒன்றில் இந்தியா பாகிஸ்தான் தொடரின் போது பாகிஸ்தானின் இஸ்லாமிய பேச்சாளாரன மௌலானா தாரிக் ஜமீலின் பேச்சைக் கேட்டு ஹர்பஜன் சிங் இஸ்லாத்துக்கு மாற விருப்பம் கொண்டதாகக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஹர்பஜன் பதிலடி  

இந்த நிலையில், இன்சமாம் உல் ஹக் கருத்துக்கு விளக்கமளித்துள்ள ஹர்பஜன் சிங் பதிலடியும் கொடுத்துள்ளார். "யாராவது இன்சமாமை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. அவர் மனநிலை சரியில்லை. அவர் தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஒரு சீக்கியன், சீக்கிய குடும்பத்தில் பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

இன்சமாம் மீடியாக்களுக்கு முன்னால் இதுபோல பொய்யான விஷயங்களைக் கூறி நாடகமாடுகிறார். அவர் எவ்வளவு குடிபோதையில் இருக்கிறார், என்ன புகைப்பிடிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் போதையில் அவர் என்ன சொன்னாலும், மறுநாள் காலையில் அது அவருக்கே நினைவில் இருக்காது என்று நினைக்கிறேன்" என்று ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Harbhajan Singh Inzamam Ul Haq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment