Harbhajan Singh Tamil News: 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான சுழற்சி போட்டிகள், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடருடன் தொடங்கியுள்ளது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டதற்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 தோல்வியை பெற்றுள்ள நிலையில், அதிலிருந்து மீள திட்டமிட்டு வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த தொடரில் இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில், அவையும் பரபரப்பாக அரங்கேறினால் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் பயணம்
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியின் வீரர்கள் நல்ல ரன் மற்றும் விக்கெட் வேட்டை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் 5 டெஸ்ட் கிரிக்கெட்டர்ஸ்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் தற்போதைய 5 சிறந்த டெஸ்ட் வீரர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பட்டியலில் இந்திய டாப் ஆடர் வீரர்கள் ஒருவர் கூட இல்லை. இதேபோல் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பெயர் கூட இடம் பெறவில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் பெயர்கள் தான் இடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் உள்ளனர். 3வது மற்றும் 4வது வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்தர் ஜடேஜா உள்ளனர். 5வது இடத்தில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளார்.
ஜடேஜா - பண்ட் ஏன்?
ரவீந்திர ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் வீரராக கலக்கி வருகிறார். அதேவேளையில் ரிஷப் பண்ட் ஆக்ரோஷமான இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். ஜடேஜா இந்தியாவின் மிகவும் நம்பகமான பேட்டர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அதாவது, அஷ்வின் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரை விட ஜடேஜா பெரும்பாலும் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்து விடுகிறார். இந்திய அணியில் எக்ஸ்-பேக்ட்டராக இருந்த பண்ட் தற்போது தனது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இருவருமே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தந்திரமான சூழல் கொண்ட மைதானங்களில் சிறப்பாக விளையாடியுள்ளனர். கடந்த 4-5 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனகாவும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil