‘ஒய் திஸ் கொலவெறி’ பாடிய பாண்ட்யா பிரதர்ஸ்! தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி!

வீரர்கள் மத்தியில் இவரது பெயரே 'ராக் ஸ்டார்' தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆடல், பாடல், மியூசிக், கம்போஸிங், கிரிக்கெட் என 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'வாக வலம் வருகிறார்

By: Updated: August 10, 2019, 10:33:20 PM

பள்ளிக் கூடங்களில் Extra Curricular Activities-களில் மாணவர்கள் படிப்பை காட்டிலும் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். அதுபோல இப்போதெல்லாம் நமது கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டைத் தாண்டி பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதை பார்த்து வருகிறோம்.

ஸ்ரீசாந்த் நன்றாக நடனம் ஆடக் கூடியவர். யுவராஜ், தோனி ஆகியோர் நன்றாக பாடுவார்கள். அதிலும், தோனிக்கு பைக், கார், ரேஸ் என்பதைத் தாண்டி பாடுவதில் எப்போதும் அலாதி ஆர்வம் உண்டு. இந்த மாற்றங்களின் 2.0 பரிணாமமாக இப்போதுள்ள இந்திய வீரர்கள் உள்ளனர்.

அதில் குறிப்பிடத்தக்கவர் ஹர்திக் பாண்ட்யா. வீரர்கள் மத்தியில் இவரது பெயரே ‘ராக் ஸ்டார்’ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆடல், பாடல், மியூசிக், கம்போஸிங், கிரிக்கெட் என ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வலம் வருகிறார். அதனால் சில சிக்கல்களையும் அவர் சந்தித்திருப்பது தனிக்கதை.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை ஹார்திக் பாண்ட்யாவும், அவரது சகோதரர் க்ருனல் பாண்ட்யாவும் இணைந்து பாடியிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மெட்ராசுக்கு வந்து ரெண்டு பாட்டு பாடிட்டு போங்கப்பு!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Hardik and krunal pandya sung why this kolaveri song video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X