'அன்று அந்த வீரரின் அறையில்....!' ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்! பிசிசிஐ நோட்டீஸ்

"யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்"

காயம் காரணமாக நீண்ட நாட்களாக டைம் லைனில் இல்லாத ஹர்திக் பாண்ட்யா, தற்போது சர்ச்சைக்குரிய சில கருத்துகளால் மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு உலகம் முழுக்க உள்ள ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2011 உலகக் கோப்பையை வென்றதைவிட, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கோப்பையை வென்றதே உணர்ச்சிமயமானது என கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள் குறித்துப் பேசிய கருத்துகளுக்காக இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில், பல்வேறு துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் சில விஷயங்களை ஓப்பனாக பேசப் போய் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.

பாண்ட்யா பேசிய சில சாம்பிள் இதோ,

“கருப்பு ஆளுங்களான எங்களுக்கு பெண்களைப் பார்த்தால் ஒரு ஈர்ப்பு வரத் தான் செய்யும். நான் முதன் முதலாக எனது வெர்ஜினிட்டியை இழந்த பிறகு, அந்த சம்பவத்தை முதன் முதலாக எனது தாயிடம் தான் தெரிவித்தேன். என் அம்மாவிடம் சென்று, ‘நான் இன்று செக்ஸில் ஈடுபட்டேன்” என்றேன்.

எங்கள் குடும்பம் அவ்வளவு ஜோவியலான குடும்பம். பார்ட்டிகளுக்கு போகும் போது, என் தாயாரிடம் அங்குள்ள பெண்கள் குறித்து பேசுவேன்.

அங்கு பெண்கள் எப்படி அசைகிறார்கள் என்பதை ஆராய்வேன். நான் கருப்பாக இருப்பதால், அவர்களை ரசிப்பதை விரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்து லோகேஷ் ராகுலிடம் கரண் ஜோஹர் கேள்வி ஒன்றை கேட்கிறார். “அறைகளில் தங்கி இருக்கும் போது, உங்கள் ரூம் தவிர்த்து மற்றொரு வீரரின் அறைக்குச் சென்று பெண்ணுடன் செக்ஸில் ஈடுபட்டுள்ளீர்களா?.

ஆம்! என்று பதிலளிக்கிறார் லோகேஷ். என் ரூமிற்கு வெளியே வேறொரு வீரரின் அறைக்குச் சென்று பெண்ணுடன் இணைந்து செக்ஸில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று ஓப்பனாக தெரிவித்து இருக்கிறார். 

ஒரே பெண்ணை இருவருக்கும் பிடித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்க, “அந்த பெண்ணின் முடிவுக்கே விட்டுவிடுவோம்” என ராகுல் கூற, “இல்லை… இல்லை… யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பாண்ட்யா பதில் தெரிவித்து இருக்கிறார்.

இவர்கள் இருவரின் இந்தப் பேச்சு சமூக தளங்களில் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாண்ட்யா, “காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியின் இயல்பை கருத்தில் கொண்டே நான் பேசினேன். எந்த வகையிலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற்றிருக்கிறார். இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி, சிட்னியில் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், விவகாரமான விஷயங்களை பொதுவெளியில் பேசி சிக்கியிருக்கும் ஹர்திக் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தற்போது நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்திற்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close