பலே… பலே! தந்தையாகிறார் ஹர்திக் பாண்ட்யா! ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்

Hardik Pandya: இவருக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? அப்பா ஆயிட்டாரா? என்று ஷாக்காக வேண்டாம். நமக்கும் அதே ஷாக் தான். ஆனால், தான் அப்பாவாகப் போவதை பாண்ட்யாவே அறிவித்திருக்கிறார். நடாசா ஸ்டான்கோவிக் எனும் மாடலை, கடந்த ஜனவரி.2ம் தேதி கடலில் ஒரு சிறிய படகில் வைத்து புரபோஸ் செய்து அந்த புகைப்படங்களை  “Starting the year with my firework ❣️” என்று வெளியிட்டார். இன்றோடு மே மாதம் நிறைவுறுகிறது. அப்பா ஆயிட்டார். அவர் சொன்ன மாதிரி […]

hardik pandya, hardik pandya father, hardik pandya wife, ஹர்திக் பாண்ட்யா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், natasa stankovic pregnant, hardik pandya wife, hardik pandya news, cricket news
hardik pandya, hardik pandya father, hardik pandya wife, ஹர்திக் பாண்ட்யா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், natasa stankovic pregnant, hardik pandya wife, hardik pandya news, cricket news

Hardik Pandya: இவருக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? அப்பா ஆயிட்டாரா? என்று ஷாக்காக வேண்டாம். நமக்கும் அதே ஷாக் தான். ஆனால், தான் அப்பாவாகப் போவதை பாண்ட்யாவே அறிவித்திருக்கிறார்.

நடாசா ஸ்டான்கோவிக் எனும் மாடலை, கடந்த ஜனவரி.2ம் தேதி கடலில் ஒரு சிறிய படகில் வைத்து புரபோஸ் செய்து அந்த புகைப்படங்களை  “Starting the year with my firework ❣️” என்று வெளியிட்டார். இன்றோடு மே மாதம் நிறைவுறுகிறது. அப்பா ஆயிட்டார். அவர் சொன்ன மாதிரி தீயா தான் வேலை செய்திருக்கிறார்.

‘டிஜே வாலே பாபு’-னு ஒரு ஹிப்ஹாப் ராப் ஆல்பம் பார்த்து இருக்கீங்களா?…. அதில் பிரபலமானவர் தான் நடாசா ஸ்டான்கோவிக். செர்பியன் மாடலான இவர் 2012ல் இந்தியாவுக்கு வந்து பாலிவுட் சினிமாவில் ஐட்டம் சாங் ஆட, நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தது.

அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார்.

தனது காதலி கர்ப்பம் அடைந்தது குறித்து பாண்ட்யா தனது ட்விட்டரில், “நடாசாவும் நானும் சேர்ந்து ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு புதிய உறவை மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் வரவேற்க நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு செல்ல நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் ஆசீர்வாதங்களையும் விருப்பங்களையும் நாடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, ரசிகர்கள் பலரும் பாண்ட்யாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க, இந்திய அளவில் பாண்ட்யா டிரெண்டிங்கில் உள்ளார்.

தீயா வேலை செய்யணும் குமாரு!!

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hardik pandya become father fiancee natasa stankovic pregnant

Next Story
ரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோfirst tamil wrestler, jey jackson, sports news, latest sports updates, ரெஸ்ட்லிங், மல்யுத்தம், விளையாட்டு செய்திகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express