Advertisment

'வந்தா கேப்டனாதான் வருவேன்': மும்பை இந்தியன்சுக்கு கண்டிஷன் போட்ட ஹர்திக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை தனக்கு கொடுத்தால் தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்டியா நிபந்தனை விதித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Hardik Pandya condition to return Mumbai Indians Tamil News

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது.

Mumbai-indians | hardik-pandya | Rohit Sharma | ipl-2024: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், உலகக் கோப்பை தொடர் தொடங்கிய போதே, வரவிருக்கும் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என ரோகித் சர்மாவுக்கு என்று தெரிவிக்கப்பட்டது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை தனக்கு கொடுத்தால் தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை அணி நிர்வாகத்திடம் ஹர்திக் நிபந்தனை விதித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit informed about Pandya taking over Mumbai Indians captaincy just before the World Cup

உலகக் கோப்பையின் தொடக்கத்தில், மும்பை அணியின் எதிர்கால திட்டம் குறித்து ரோகி புரிந்துகொள்ள செய்யப்பட்டார் என்பதையும்,  மேலும், தொடர் கூட்டங்களில் கேப்டன்சியில் உடனடி மாற்றம் தேவை என அவருக்கு தெரிவிக்கப்பட்டு, வரும் சீசனில் ஹர்திக் பாண்டியாவின் கீழ் விளையாடும் திட்டத்திற்கு அவர் உடன்பட்டார் என்பதையும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

ஹர்திக் பாண்டியா முந்தை 2 சீசனிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது. தான் மீண்டும் மும்பை அணியுடன் இணைய வேண்டுமானால், அவர் தான் அணியை வழிநடத்துவார் என்று ஹர்திக் பாண்டியா அணி நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. 

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவின் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டது. பின்னர் உலகக் கோப்பையின் போது ரோகித் சர்மாவிடம் இது குறித்து தெரிவித்தது. அவர் அதற்குள் அணியின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையை அணி நிர்வாகத்திடமே விட்டுவிட்டார் என்பதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. 

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது சுருக்கமாக:- 

- டிரேட் முறையில் வாங்க ஹர்திக் பாண்டியா வை மும்பை இந்தியன்ஸ் அணுகியது. 

- கேப்டனாக்க ஹர்திக் கண்டிஷன் போட்டுள்ளார். 

- ஹர்திக்கின் நிபந்தனையை ஏற்று ரோகித்திடம் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.  

- ஹர்திக் கேப்டன்சி கீழ் விளையாட ரோகித் ஒப்புக்கொண்டுள்ளார். 

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rohit Sharma Mumbai Indians Hardik Pandya IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment