/tamil-ie/media/media_files/uploads/2018/10/d560.jpg)
hardik pandya, ஹர்திக் பாண்ட்யா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் காயம்(முதுகு வலி) காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா தற்போது வரை தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.
காயத்தால் ஆசிய கோப்பை தொடர் முழுவதும் பங்கேற்க முடியாமல் தவித்த ஹர்திக் பாண்ட்யாவால், தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரிலும் கலந்து கொள்ள முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியிலும் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தோனிக்கு பிறகு ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை ஓரளவு காப்பாற்றி வந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு இந்த காயம் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், இன்று ஹர்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், நானும் ஆட்டத்துக்கு ரெடி என்று பிசிசிஐ-கு தெளிவாக உணர்த்திய ஹர்திக் பாண்ட்யா, யோ-யோ டெஸ்ட்டிலும் தேர்ச்சி அடைந்துவிட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
With hardwork, there are no limits ???? #RoadToRecoverypic.twitter.com/MiI0zr9TLi
— hardik pandya (@hardikpandya7) 30 October 2018
வர்லாம் வர்லாம் வா...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.