Hardik Pandya Tamil News: 15-வது ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிற்று கிழமை இரவு துபாயில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார்.
தொடக்கம் முதலே மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Four wickets from @BhuviOfficial and three from @hardikpandya7 as Pakistan are all out for 147 in 19.5 overs.#TeamIndia chase underway.
LIVE - https://t.co/o3hJ6VNfwF #INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/V2ftsLBGSa— BCCI (@BCCI) August 28, 2022
இதனைத்தொடர்ந்து, 148 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கே.எல் ராகுல் (0), கேப்டன் ரோகித் (12) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 35 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 18 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு அசத்தலான பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா - ஹர்திக் பாண்டியா ஜோடியில், 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை பறக்கவிட்ட ஜடேஜா 35 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு டாட் பால் விட்டு, அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் ஹர்திக் பாண்டியா. அவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 33 ரன்கள் எடுத்த பாண்டியா, பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றி மிரட்டி இருந்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டச் சென்றார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.
WHAT. A. WIN!#TeamIndia clinch a thriller against Pakistan. Win by 5 wickets 👏👏
Scorecard - https://t.co/o3hJ6VNfwF #INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/p4pLDi3y09— BCCI (@BCCI) August 28, 2022
இந்த ஆட்டத்திற்கு பிறகான பேட்டியில் பேசிய ஹர்திக் பாண்ட்யா, 'இதுபோன்று இலக்கை விரட்டிப்பிடிக்கையில் (சேசிங்) ஒவ்வொரு ஓவர், ஓவராக திட்டமிட்டு செயல்பட வேண்டும். கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசுவார் என்பது தெரியும். கடைசி ஓவரில் எங்களது வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஒருவேளை வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்திருத்தாலும் அதனை அடித்து இருப்பேன்.
கடைசி ஓவரில் பவுலர் அதிக அழுத்தத்தில் இருப்பதை அறிந்தேன். இறுதி ஓவரில் எனக்கு ஒரே ஒரு சிக்சர் மட்டுமே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி 10 பீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தி இருந்தாலும் நான் சிக்சர் விளாசி இருப்பேன். பந்து வீச்சை பொறுத்தமட்டில் சூழ்நிலையையும், ஆடுகளத்தையும் புரிந்து அதற்கு தகுந்தபடி பவுலிங் செய்ய வேண்டியது முக்கியமானதாகும். பந்து வீச்சில் எனது பலமான ஷாட் பிட்ச் பந்துவீசி பேட்ஸ்மேன்களை தவறிழைக்க வைக்க முயற்சித்தேன்" என்று கூறியிருந்தார்.
For his match-winning knock of 33* off 17 deliveries, @hardikpandya7 is our Top Performer from the second innings.
A look at his batting summary here 👇👇#INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/DEHo3wPM1N— BCCI (@BCCI) August 28, 2022
பழசை மறக்காத பாண்டியா… வைரல் புகைப்படம்…
இந்திய கிரிக்கெட் அணியில் 2016 ஆம் ஆண்டு அறிமுமானவர் ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா. சர்வதேச ஆட்டங்களில் ஆரம்ப நாட்களில் அதிகம் கவனம் ஈர்த்த இவர், அணியில் அசைக்க முடியா ஆல்ரவுண்டராக உருவெடுத்தார். மேலும், சர்வதே அரங்கில் பல சாதனைகளை பதிவு செய்து வந்தார். ஆனால், அவ்வப்போது காயங்களால் அவதிப்பட்டு வந்த அவர் பந்துவீச்சில் சிரமங்களை சந்தித்தார்.
அவரின் காயங்கள் குணமாகி, அவர் மீண்டு எழுவதற்குள் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தன. எனினும், அவை கவலையுறா பாண்டிய, காயத்திலிருந்து மீண்டெழுந்து, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி, அறிமுக தொடரிலே கோப்பையை முத்தமிட செய்தார். அதை தொடர்ந்து இந்திய அணிக்கும் மீண்டும் ஒரு கலக்கலான கம்பேக் கொடுத்தார். தற்போது தரமான ஆல்ரவுண்டராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், பாண்டியா கிரிக்கெட்டில் தான் சந்தித்த பின்னடைவு மற்றும் அதன் பிறகு அதே களத்தில் தனது கம்பேக்கை சுட்டிக்காட்டும் படங்களை, தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று வெளியிட்டிருந்த அவரது பதிவில், கடந்த 2018 ஆசிய கோப்பையின் போது காயமடைந்த காரணத்தால் களத்தில் இருந்து 'ஸ்ட்ரெச்சரில்' கொண்டு செல்லப்பட்ட படத்தையும், நேற்று முந்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தை வென்று கொடுத்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் பாண்டியா அந்த பதிவில், "உங்கள் வீழ்ச்சியை விட எழுச்சி பெரிதாக இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிர்களால் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அவரது இந்த பதிவிற்கு பாராட்டு மழையும் பொழிந்து வருகிறார்கள்.
இதோ அந்த பதிவு…
The comeback is greater than the setback 🇮🇳 pic.twitter.com/KlnD4GZ4ZO
— hardik pandya (@hardikpandya7) August 29, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.