worldcup 2023 | india-vs-new-zealand | hardik-pandya: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடி 4 போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்று வீர நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிகள் மூலம் 8 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா (+1.659) புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் +1.923 நெட் ரன்ரேட்டுடன் நியூசிலாந்து உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றியை ருசிக்கும் அணி முதலிடத்தைப் பிடிக்கும். அத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் பலப்படுத்தும்.
முந்தைய போட்டியில் இந்தியா வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில், அந்தப் போட்டியின் போது இந்திய ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் இந்தப் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் இந்திய அணி நிர்வாகம் எந்த வீரரைக் களமிறக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவையும், பந்துவீச்சை வலுப்படுத்த ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியையும் தேர்வு செய்துள்ளார்.
2023 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஆகாஷ் சோப்ராவின் இந்திய கிரிக்கெட் அணி:
ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஜஸ்பிரித் பும்ரா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“