ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக குவஹாத்தியில் நடைபெற உள்ள பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு அறை புக் செய்துள்ளதாக ‘ராடிசன் புளு’ (Radisson Blu) தனியார் ஹோட்டல் தவறாக ‘செக் இன்’ மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்காக குவஹாத்தியில் ராடிசன் புளூ ஹோட்டலில் தங்கியுள்ளது.
இந்திய அணி இன்று (செப்டம்பர் 28) சொகுசு ஹோட்டலில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. ராடிசன் புளு தனியார் ஹோட்டல் தவறாக ஹர்திக் பாண்டியாவுக்கு செக்-இன் மின்னஞ்சலை அனுப்பிய பிறகு வெளியே தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது பெயருக்கு ரூம் செக் இன் செய்யப்பட்டு வந்த மின்னஞ்சலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
ஹர்திக் பாண்ட்யா - அகாடமியில் இல்லாத ஊழியர், கிரிக்கெட் வீரர் அல்ல - என்று அவருக்கு தவறாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். “எனக்கு நாளை குவஹாத்திக்கு செல்லும் திட்டம் இல்லை. கவுகாத்தியில் நடைபெறும் #ICCWorldCup வார்ம்-அப் போட்டிக்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு (@hardikpandya7-க்கு_ முன்பதிவு செய்யப்பட்ட அறை இது எனத் தெரியவந்துள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“நீங்கள் அவருடைய இருப்பிடத்தை இப்போது வெளியே தெரியப்படுத்திவிட்டீர்கள்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். “இது பித்துகுளித்தனமானது. அவர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி குழப்பியுள்ளார்களா?” என்று இன்னொருவர் கம்மெண்ட் செய்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா இந்த குழப்பம் ஹோட்டல் தரப்பில் நடந்த தவறு என்று அழைத்தார்.
செப்டம்பர் 30, சனிக்கிழமை அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்தியா தனது போட்டித் தொடரைத் தொடங்கவுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் உலகக் கோப்பை மோதலில் பரம எதிரியான பாகிஸ்தானையும், அக்டோபர் 29-ம் தேதி லக்னோவில் இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“