Advertisment

இன்னும் 2 போட்டிக்கு நோ சான்ஸ்: ஹர்திக் பாண்டியா லேட்டஸ்ட் ஃபிட்னஸ் ரிப்போர்ட்

காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இன்னும் இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்றும், அவர் கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாட மட்டுமே தகுதியுடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Hardik Pandya to miss two more games due to injury CWC 2023 Tamil News

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்தை காலை வைத்து தடுக்க முயன்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

worldcup 2023 | indian-cricket-team | hardik-pandya: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் களமாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஐந்திலும் வெற்றியைப் பெற்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. 

Advertisment

அடுத்ததாக இந்திய அணி அதன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியானது வருகிற ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்திய அணி நவம்பர் 2ம் தேதி இலங்கையுடன் மும்பையிலும், நவம்பர் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுடன் கொல்கத்தாவிலும், நவம்பர் 12ம் தேதி நெதர்லாந்து அணியுடன் பெங்களூருவிலும் நடக்க உள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: reaking: Hardik Pandya to miss two more games due to injury; likely to be fit for last two league games from November 5

ஹர்திக் காயம் 

இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணியில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்தை காலை வைத்து தடுக்க முயன்ற அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க இங்கிலாந்தில் இருந்து சிறப்பு மருத்துவர் ஒருவரும், தேவையான ஊசிகளும் வரவழைக்கப்பட்டன. 

ஃபிட்னஸ் ரிப்போர்ட்

தற்போது காயத்திற்கு ஹர்திக் பாண்டியா சிகிச்சை பெற்றும் வரும் நிலையில், கடந்த 22 ஆம் தேதி தர்மசாலாவில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை தவறிவிட்டார். அவர் லக்னோவில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குனார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இன்னும் இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்றும், அவர் கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாட மட்டுமே தகுதியுடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா எதிராக மற்றும் நவம்பர் 5 ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான கடைசி இரண்டு உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் மட்டுமே இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார்  என்று தெரியவந்துள்ளது. மும்பை அல்லது கொல்கத்தாவில் இந்திய அணியுடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நிர்வாகம் அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை. மேலும் அவர் கடைசி இரண்டு ஆட்டங்களுக்கு முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று நம்புகிறார்கள். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், அரையிறுதிக்கு முழுமையாக தகுதி பெற்ற பாண்டியாவை அணி நிர்வாகம் விரும்புகிறது.

“புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்து பீல்டிங் செய்யும் போது இடது கணுக்கால் காயம் அடைந்தார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்” என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team Hardik Pandya Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment