மனைவி நடாசாவுடன் விவாகரத்து? விடுமுறைக்கு வெளிநாடு பறந்த ஹர்திக்!

ஹர்திக் உடன் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து பெறப்போவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வரும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்றது பேசப்பட்டு வருகிறது.

ஹர்திக் உடன் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து பெறப்போவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வரும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்றது பேசப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Hardik Pandya Vacationing Abroad Amid Divorce Rumours With Wife Natasa Stankovic Tamil News

ஹர்திக் பாண்டியா, நியூயார்க்கில் நடைபெறும் முதல் பயிற்சி அமர்வுக்கு சரியான நேரத்தில் இந்திய அணியுடன் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). இவர் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று நியூயார்க் நகரை அடைந்து விட்டது. அந்த குழுவில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. 

Advertisment

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாகவும், அதனை முடித்துவிட்டு நேரடியாக அவர் நியூயார்க் இருக்கும் இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹர்திக் உடன் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து பெறப்போவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வரும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கிரிக்பஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக், அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியதும்,  டி20 உலக் கோப்பைக்கு புத்துயிர் பெற்று தயாராகும் நோக்கத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் வெளியில் பெயர் வெளியிட விரும்பாத வெளிநாட்டில் விடுமுறையைக் கழிக்க முடிவு செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடைபெறும் முதல் பயிற்சி அமர்வுக்கு அவர் சரியான நேரத்தில் அணியுடன் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் - நடாஷா விவாகரத்து? 

தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த சோதனையாக, அவரது மனைவி நடாஷா உடனான விவாகரத்து விவகாரம் பூதாகரமாகியுள்ளது. செர்பிய நாட்டு மாடலும், நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த 2020 மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதே ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி அகஸ்திய பாண்டியா என்கிற மகன் பிறந்தார். பாண்டியாவும் நடாசாவும் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 2023 இல் உதய்பூரில் நடந்த விழாவில் தங்கள் திருமணத்தை புதுப்பித்துக் கொண்டனர். 

Advertisment
Advertisements

இந்நிலையில், ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவர். இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகும். 

அண்மையில், ஹர்திக் மனைவி நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து "பாண்டியா" என்ற குடும்பப் பெயரை நீக்கியுள்ளார். கடந்த மாதம் அவரது பிறந்தநாளின்போது கூட, ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை. மகன் அகஸ்தியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதள கணக்கிலிருந்து நடாஷா நீக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற காரணங்களால்தான், ஹர்திக்  - நடாஷா தம்பதி பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கியது, ஐ.பி.எல். 2024 போட்டிகளின் போது நடாஷா மைதானத்திற்கு வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள்  நீக்கப்பட்டு இருப்பது போன்றவைகளால், அவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக பலரும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Hardik Pandya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: