ஜாகீர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘டியூட் சொசைட்டி’ பாஸ் பாண்ட்யா!

Dude Society கேள்விப்பட்டு இருக்கீங்களா? சமூக கோட்பாடுகளை தகர்த்தெறிந்து, சுதந்திரமாக, தன்னிச்சையாக, விதிகளுக்கு விடை கொடுத்து, கலாச்சாரங்களுக்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் சமுதாயம் எனலாம். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், எதைப் பற்றியும் கவலைப்படாத இளைய சமுதாயம் எனலாம். அப்படிப்பட்ட சொசைட்டியில் இருந்து வந்தவர் ஹர்திக் பாண்ட்யா. அவரை குறை சொல்லவில்லை. ஆனால்,…

By: October 9, 2019, 11:52:19 AM

Dude Society கேள்விப்பட்டு இருக்கீங்களா? சமூக கோட்பாடுகளை தகர்த்தெறிந்து, சுதந்திரமாக, தன்னிச்சையாக, விதிகளுக்கு விடை கொடுத்து, கலாச்சாரங்களுக்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் சமுதாயம் எனலாம். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், எதைப் பற்றியும் கவலைப்படாத இளைய சமுதாயம் எனலாம்.

அப்படிப்பட்ட சொசைட்டியில் இருந்து வந்தவர் ஹர்திக் பாண்ட்யா. அவரை குறை சொல்லவில்லை. ஆனால், அவரது செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள் போன்றவை ஹர்திக்கை அவ்வாறாகவே சமூகத்துக்கு அடையாளப்படுத்துகின்றது.

நிச்சயம் dude சொசைட்டி என்பது குறைபாடான சொசைட்டி அல்ல. ஹர்திக்கும் குறை சொல்லும் அளவிற்கான நபரும் அல்ல. ஆனாலும் சமூகம் அவரை சில சமயம் வசைபாடுகிறது.


இந்திய கிரிக்கெட் அணியில் ஹீரோவாக இருந்தாலும், சிக்ஸர்களால் சேஷ்டைகள் செய்தாலும், அவரது ஆஃப் தி கிரவுண்ட் சேஷ்டைகளால் வஞ்சிக்கப்படுகிறார்.

குறிப்பாக, லோகேஷ் ராகுலுடன் இணைந்து, கரன் ஜோஹருக்கு அவர் அளித்த பேட்டியில் பெண்கள் குறித்து அவர் வெளியிட்ட சில கருத்துகளால், அணியில் இருந்தே சஸ்பென்ட் செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் தனது சேஷ்டையால் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.


ஜாகீர் கான் தன்னுடைய 41வது பிறந்தநாளை கடந்த திங்கட்கிழமை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை பதிவிட்டார். ஜாகீர் கான் வீசிய பந்தில் தான் சிக்ஸர் அடிக்கும் அந்த வீடியோவை பதிவிட்டு, “பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்… நான் இங்கு மைதானத்துக்கு வெளியே அடிப்பது போல் நீங்களும் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். தான் யாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்கிறோமோ அவரையே மட்டம் தட்டி வெறுப்பேற்றுவது போல அந்த வீடியோ உள்ளதாக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

தொடர்ந்து, பாண்ட்யாவின் இந்த ட்வீட் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Hardik pandya wishes zaheer khan birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X