Advertisment

'இந்திய அணிக்கு நெட் பவுலராக இருந்தபோது நான் பார்த்த கோலி': பிரமித்த ஹாரிஸ் ராஃப்

2023 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள ஹாரிஸ் ராஃப் விராட் கோலி குறித்து பிரமித்து பேசியுள்ளார். இந்திய அணிக்கு நெட் பவுலராக இருந்ததைப் பற்றியும் கூறி நெகிழ்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Haris Rauf recalls bowling to Virat Kohli in nets

2019-20 பி.பி.எல் தொடரில் ராஃப் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்த தொடரில் அவர் தனது அசத்தலான வேகத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

 Virat-kohli | Haris Rauf | indian-cricket-team | pakistan: பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்  (29). பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2020ம் ஆண்டில் அறிமுகமான இவர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 53 விக்கெட்டுகளும், 62 டி20 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

Advertisment

முன்னதாக 2019-20 பி.பி.எல் தொடரில் ராஃப் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்த தொடரில் அவர் தனது அசத்தலான வேகத்தால் அனைவரையும் கவர்ந்தார். மேலும் போட்டியில் 5 விக்கெட்டுகளை ஹாட்ரிக் சாதனையையும் படைத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) அடுத்தடுத்து பட்டங்களை வென்ற முதல் அணியான லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காகவும் ராஃப் விளையாடுகிறார்.

publive-image

இந்நிலையில், 2023 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள ஹாரிஸ் ராஃப் விராட் கோலி குறித்து பிரமித்து பேசியுள்ளார். மேலும் அவர் இந்திய அணிக்கு நெட் பவுலராக இருந்ததைப் பற்றியும் கூறி நெகிழ்ந்துள்ளார். 

ஈ.எஸ்.பி.என் (ESPNcricinfo) தயாரித்துள்ள The Incredible rise of Haris Rauf என்ற ஆவணப்படத்தில் ஹாரிஸ் ராஃப் பேசுகையில், “நான் இந்திய அணிக்கு நெட் பவுலராக இருந்தபோது, ​​விராட் கோலிக்கு பந்துவீசினேன். அவருக்கு பந்துவீசும்போது, ​​பந்து அவருடைய பேட்டையைத் தாக்கும் இடம் அவருக்குத் தெரிந்தது போல் உணர்ந்தேன். அவர் மிகவும் கவனம் செலுத்தினார். அது அவருடைய கவனம் எவ்வளவு கூர்மையாக இருந்தது என்பதைக் காட்டியது. 

publive-image

நெட்ஸில் பயிற்சி செய்யும் போது கூட, நான் ஒரு நெட் பவுலராக இருந்தாலும், அவருக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுவது போல் உணர்ந்தேன். அவரது குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு மற்றும் தீவிரம் அவர் விளையாட்டில் ஏன் இவ்வளவு நற்பெயர் பெற்றுள்ளார் என்பதை எனக்கு உணர்த்தியது." என்று கூறினார். 

2018-19ல், இந்தியா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஹாரிஸ் ராஃப் இந்தியாவுக்கு நெட் பவுலராக அழைக்கப்பட்டார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உச்சத்தில் இருந்த கோலிக்கு பந்து வீசும் வாய்ப்பையும் பெற்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Indian Cricket Team Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment