Advertisment

ஸ்டெம்பு மீது தாக்குதல், அம்பயரை வசைபாடல்: கேப்டன் கவுரை விமர்சித்த வங்கதேச ஊடகங்கள்

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கள நடுவரை வசைபாடியதை அடுத்து, அவரின் நடத்தையை வங்கதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Harmanpreet slams umpire, Bangladesh media criticise behaviour Tamil News

Harmanpreet Kaur Tamil News: வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணமாக சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் வங்கதேச அணியும், 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

Advertisment

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. 226 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் இந்த போட்டி 'டை'யில் முடிந்தது. இதேபோல், தொடரும் சமனில் முடிந்தது. எனவே, இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன.

ஸ்டெம்பை அடித்து நொறுக்கிய இந்திய கேப்டன்

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழந்த விதம் கடும் சர்ச்சையை எழுப்யுள்ளது. வங்கதேச அணியின் நகிதா அக்தர் வீசிய 33வது ஓவரின் 4வது பந்தில் நடுவரால் எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டு ஆட்டமிழந்து இருந்தார். ஆனால், கள நடுவர் அவுட் கொடுத்ததை ஏற்க மறுத்த கவுர் களத்திலே கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதோடு, நடுவரைப் பார்த்து ஆவேசமாக பேசியபடி வெளியேறினார். மேலும், போட்டிக்கு பிந்தைய பேட்டியில் நடுவரை "பரிதாபம்" என்று அழைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்தை ஸ்வீப் ஆட முயன்ற போது, பந்து பேடில் பட்டதாகக் கருதி அவுட் கொடுத்தார் நடுவர். ஆனால் பந்து பேடில் படுவதற்கு முன்பாக அவரது பேட்டில் பட்டு இருந்தது. இதற்கு தனது பேட்டையை தூக்கி நடுவரிடம் சைகையும் காட்டினார். ஆனாலும், நடுவர் அவுட் கொடுத்ததால் ஏமாற்றமடைந்த கவுர், நடுவரிடம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அபராதம்

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் நடத்தைக்காக போட்டி கட்டணத்தில் இருந்து 75% அபாரமாக விதிக்கப்பட்டுள்ளது. 50% அவர் ஸ்டெம்பை அடித்து நொறுக்கியதற்கும், 25% அவர் விருது நிகழ்வின் போது நடுவரை அவமரியாதையாக பேசியதற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர் 24 மாதங்களுக்குள் மேலும் 1 டிமெரிட் புள்ளியைப் பெற்றால், அவரால் 1 டெஸ்ட் அல்லது 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும்.

விமர்சனம்

இதற்கிடையில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் நடத்தையை வங்கதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், உள்ளூர் ஆன்-பீல்ட் நடுவர்களான முஹம்மது கம்ருஸ்ஸாமான் மற்றும் தன்வீர் அகமது ஆகியோரை வசைபாடியும் இருந்தார்.

இந்த நிலையில், வங்கதேச ஊடகங்கள் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அணி புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்கு முன்பு, வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டியை அவமரியாதை செய்ததாகவும், கிரிக்கெட்டையும் அவர் அவமரியாதை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அணியின் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்கு முன், ஹர்மன்ப்ரீத், பகிரப்பட்ட கோப்பைக்கான காரணங்களாக இருந்ததால், நடுவர்களைச் சேர அழைத்ததாக வங்கதேச ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. அதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

publive-image

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரிய (BCB) இயக்குனர் ஷஃபியுல் ஆலம் சௌத்ரி நாடேல் டைனிக் இத்தெஃபாக் என்ற ஊடகத்திடம் பேசுகையில், “ஹர்மன்ப்ரீத் பேசிய விதம் ஏற்றுக்கொள்ள கூடாத ஒன்று. அது குறித்து இரண்டு வாரியங்களுக்கு இடையில் முடிவு எடுக்கப்படும். நாங்கள் அறிக்கை அளித்து பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் பேசுவோம்.

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. ஒரு நல்ல வீரராக மாறுவதற்கு முன், நீங்கள் ஒரு ஒழுக்கமான மனிதராகவும், நல்ல விளையாட்டு வீரராகவும் இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மற்றொரு செய்தி நிறுவனமான 'பங்களாதேஷ் புரோட்டிடின்', கவுரின் நடத்தைக்கு என்ன தண்டனையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. புரோதோம் அலோ செய்தித்தாளும் இந்த சம்பவத்தைப் பார்த்து, இந்திய கேப்டனின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியது.

இதற்கிடையில், இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கேப்டன் கவுருக்கு ஆதரவாக பேசியுள்ளார். "நான் நினைக்கவில்லை (அவர் இதைச் சொன்னார்). நீங்கள் கூறியுள்ளீர்கள். வங்கதேச கேப்டனை நோக்கி அவர் எதுவும் சொன்னதாக நான் நினைக்கவில்லை. நான் கேட்டதில் இருந்து, நடுவரைப் பற்றி கொஞ்சம் பேசினார். அவர் அவர்களை (வங்கதேச வீராங்கனைகளை) பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நான் நினைக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Harmanpreet Kaur India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment