Advertisment

சதமடித்து மிரட்டிய கேப்டன் கவுர்… அபார வெற்றியை ருசித்த இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தல்!

India Women vs England Women, 2nd ODI Highlights in tamil: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Harmanpreet's Mammoth Ton Gives India Series Win Tamil News

India took an unassailable 2-0 in the three-match series after beating England by 88 runs in the second ODI at the St Lawrence Ground in Canterbury Tamil News

IND-W vs ENG-W, 2nd ODI Highlights in tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் ஆட்டம் கேன்டர்பரி மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் மந்தனா அகியோர் களம் இறங்கினர்.

இந்த ஜோடியில் ஷபாலி 8 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த யாஷ்டிகா 26 ரன்னுடனும், அவருடன் ஜோடியில் இருந்த மந்தனா 40 ரன்கள் எடுத்த நிலையிலும் மந்தனா ஆட்டம் இழந்தார். தொடர்ந்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்-ஹார்லீன் இணை 113 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஹார்லின் 58 ரன்னுக்கும், அடுத்து வந்த பூஜா 18 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து 334 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்கமால் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த வியாட் 65 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியை ருசித்தது.

பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஹேமலதா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

சதமடித்து மிரட்டிய கேப்டன் கவுர்….

publive-image

இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து மிரட்டினார். 111 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 143 ரன்கள் குவித்தார். தனது ஆறாவது சர்வதேச சதத்தை விளாசிய அவருக்கு கிரிக்கெட் ரசிர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Vs England Sports Cricket Smiriti Mandhana Harmanpreet Kaur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment