Advertisment

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஹரியானா ஸ்டீர்லர்ஸ் வெற்றி!

புரோ கபடி தொடரில் புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Haryana Steelers vs Gujarat Giants in Match 31 updates PKL Season 10 Tamil News

புரோ கபடி 2023: ஹரியானா ஸ்டீலர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் இன்று மோதல்

pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன

Advertisment

இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 8 மணிக்கு புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. 

ஹரியானா ஸ்டீலர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்

நடப்பு புரோ கபடி தொடரில் 3 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில்  7வது இடத்தில் உள்ளது.அதேசமயம், 3 வெற்றிய, 2 தோல்வி என  17 புள்ளிகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அதன் முந்தைய ஆட்டத்தில் (டிசம்பர் 15 அன்று) புனேரி பல்டானை 44-39 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 3வது வெற்றியைப் பதிவு செய்தது. அதேநேரத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் டிசம்பர் 11 அன்று தனது கடைசி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸிடம் 32-35 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

நேருக்கு நேர் 

பி.கே.எல் தொடர் வரலாற்றில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் 7 வெற்றிகளுடன், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முன்னிலையில் உள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 1 ஆட்டம் டையில் முடிந்தது.

முந்தைய சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் 33-32 என்கிற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வென்றது.

குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஹரியானா ஸ்டீர்லர்ஸ் வெற்றி!

10-வது புரோ கபடி லீக் தொடரில் செவ்வாய்கிழமை (19.12.2023) இரவு 8 மணிக்கு புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

ஹரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. குஜராத் ஜெயன்ஸ் அணியும் 3 புள்ளிகள் பின் தங்கிய நிலையில், புள்ளிகள் சேர்ப்பதில் தொடர்ந்து விரட்டியது.

இறுதியில், ஆட்ட நேர முடிவில், ஹரியானா ஸ்டீலர்ஸ் 31 புள்ளிகளையும் குஜராத் ஜெயண்ட்ஸ் 29 புள்ளிகளையும் பெற்றிருந்தன. இதன் மூலம், 2 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.   

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment