11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் 2வது ஆட்டத்தில் வியாழக்கிமை (அக்.23) இரவு 9 மணிக்கு மோதியது. இதில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி ஹரியானா அபார வெற்றி பெற்றது.
அக்டோபர் 19 அன்று புனேரி பல்டானுக்கு எதிரான போட்டியில் 25-35 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஹரியானா ஸ்டீலர்ஸ் இந்தப் போட்டியில் களமிறங்கியது. மறுபுறம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், அக்டோபர் 22 அன்று தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 52-22 என்ற கணக்கில் தோற்கடித்த கையுடன் கால்மாடுகிறது. அதே உத்வேகத்துடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் செயல்பட நினைக்கும் அதற்கு முட்டுக்கட்டை போடவே ஹரியானா ஸ்டீலர்ஸ் முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல, இந்த ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. ஆனால்,ஹரியானா இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 37 புள்ளிகளையும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் 25 புள்ளிகளையும் எடுத்திருந்தன. இதன் மூலம், ஹரியான 12 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 15 முறை சந்தித்துள்ளது. அதில் 9 முறை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 4 முறை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் வென்றுள்ளன. 2 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன.
கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் 31-27 என்கிற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.