Advertisment

சொந்த மண்ணில் அசத்திய ஹரியானா... பாட்னாவை வீழ்த்தியது : புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர் முதலிடம்

புரோ கபடியில் இன்று இரவு 8 மணிக்கு அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Haryana Steelers vs Patna Pirates and Telugu Titans vs Jaipur Pink Panthers PKL Season 10 Tamil News

புரோ கபடி லீக் 2023 - 24: அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ்; தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இரவு 8 மணிக்கு அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வெற்றி பெற்ற ஹரியானா அணி 65 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலும், தோல்வியடைந்த பாட்னா அணி 69 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற  ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 51-44 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 87 புள்ளிகள் பெற்ற ஜெய்ப்பூர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், தோல்வியடைந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment