விராட் கோலி சாதனை முறியடிப்பு! ஆனாலும், ரசிகர்களிடம் திட்டு வாங்கும் ஹசிம் ஆம்லா!

அவரது ஆமை வேக ஆட்டத்தை ‘சுயநல இன்னிங்ஸ்’ என்று ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர்

தென்னாப்ரிக்காவின் ஹசிம் அம்லா, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது 27-வது ஒரு நாள் போட்டி சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம், குறைந்த போட்டியில் அதிக சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை ஆம்லா முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.

போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஹாசிம் ஆம்லா 120 பந்துகளை சந்தித்து 108 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 167 இன்னிங்சில் விளையாடி தனது 27-வது ஒரு நாள் சதத்தை அம்லா அடித்துள்ளார். சச்சினுக்கு பிறகு இந்திய அணியின் ரன் மெஷினாக அழைக்கப்படும் விராட் கோலி, 169 இன்னிங்ஸில் 27வது ஒருநாள் சதத்தை அடித்திருந்தார். அதனை ஆம்லா தற்போது முறியடித்துள்ளார்.

ஆம்லா இந்தச் சாதனையைப் படைத்திருந்தாலும், அவரது ஆமை வேக ஆட்டத்தை ‘சுயநல இன்னிங்ஸ்’ என்று சமூக தளங்களில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர். 120 பந்துகளை சந்தித்து, வெறும் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து 108 ரன்களே எடுத்தார். இதனால், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் அந்த அணியால் 266 ரன்களே எடுக்க முடிந்தது.

சவால் இல்லாத இந்த இலக்கை, 49.1வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் சேஸிங் செய்து வெற்றிப் பெற்றுள்ளது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hashim amla breaks virat kohlis record but faces flak for selfish innings

Next Story
‘நீ நல்லாவே விளையாடுன… அழாத!’ தோற்ற வீராங்கனையை தேற்றிய செரினா வில்லியம்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com