Advertisment

'ஸ்ட்ரீக் உயிருடன் தான் இருக்கிறார் மக்களே'… வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த முன்னாள் ஜிம்பாப்வே வீரர்!

ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது என முன்னாள் வீரரான ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heath Streak alive, Henry Olonga confirms Zimbabwe Tamil News

ஹீத் ஸ்ட்ரீக் வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பல அணிகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார்.

News about Heath Streak in Tamil: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். 2000 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையில் ஜிம்பாப்வேயின் கேப்டனாக இருந்த இவர், 65 டெஸ்ட் மற்றும் 189 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 28.14 சராசரியில் 216 விக்கெட்டுகளையும், 6079 ரன்களையும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளையும், 7129 ரன்களையும் எடுத்துள்ளார்.

Advertisment

ஹீத் ஸ்ட்ரீக் 2005ம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்பு வழிகாட்டுதல்களை மீறியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் 2021ல் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பல அணிகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Heath Streak

இந்நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது. அவர் மரணம் அடைந்ததாக கூறி கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் போன்ற இந்திய நட்சத்திரங்களும் இயற்கை எய்திய அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் செய்திகளை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

இந்நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே" என்று பதிவிட்டுள்ளார்.

heath streak

ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் ஓய்வுக்குப் பின், புலவாயோவுக்கு (Bulawayo) அருகே, தி ராபின்ஸ் ஃபார்ம்ஸ் (The Robins Farms) என்று அழைக்கப்படும் தனது 8,000 ஏக்கர் பண்ணையில் வசித்து வருகிறார். வனப்பகுதியாக உள்ள அந்தப் பண்ணையில் சிறுத்தைகள், ஒட்டகச்சிவிங்கிகள், காட்டெருமைகள், வரிக்குதிரைகள், கழுகுகள், குதிரைகள், குரங்குகள், குள்ளநரிகள் மற்றும் பலவகைப் பறவைகள் உள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று காணும் வகையில் சஃபாரி-யையும் அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Zimbabwe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment