தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்

TNPL-ல் எட்டு அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் முழு விவரம்

By: June 1, 2018, 3:07:41 PM

ஆசைத் தம்பி

ஐபிஎல் முடிந்தாலும், தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக வர உள்ளது TNPL எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டி20 கிரிக்கெட் தொடர், வெற்றிகரமாக தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் சீசனில், டூட்டி பாட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இரண்டாவது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் என்னவொரு ஆச்சர்யம் எனில், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி டூட்டி பாட்ரியாட்ஸ். இரு சீசனிலும் இவ்விரு அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம்.

தற்போது மூன்றாவது டிஎன்பிஎல் சீசன் வரும் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான வீரர்கள் தேர்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டூட்டி பாட்ரியாட்ஸ் அணி சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தியை தக்க வைத்தது.

கோவை கிங்ஸ் அணி ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் ஆகிய வீரர்களை தக்க வைத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி அருண்கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன் ஆகிய வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் அணி இந்திரஜித், பரத் சங்கர், விக்னேஷ் ஆகிய வீரர்களையும், காஞ்சி வீரன்ஸ் அணி அபராஜித், சிலம்பரசன், சஞ்சய்யாதவ் உள்ளிட்ட வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் ஆகிய வீரர்களையும், ஷாஜகான், ராஜ்குமார், மோகன் பிரசாத் உள்ளிட்ட வீரர்களை காரைக்குடி காளை அணியும் தக்க வைத்துக் கொண்டன.

எட்டு அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்,

ஐட்ரீம் காரைக்குடி காளை:

தினேஷ் கார்த்திக், அனிருதா, வி. யோ மகேஷ். ஆர் கவின், எல் சூர்யப் பிரகாஷ், லக்ஷ்மண், ஆதித்யா.வி, கிஷன் குமார் எஸ், ராதாகிருஷ்ணன், மான் கே பாஃனா, அஷ்வத் முகுந்தன், சுவாமிநாதன். எஸ், அஜித் குமார் டி, எஸ் கணேஷ், ஆர் ஸ்ரீனிவாசன், பி முருகேஷ்.

திண்டுக்கல் டிராகன்ஸ்:

சதுர்வேத் என்.எஸ், ஹரி நிஷாந்த் சி, அனிருத் சீதா ராம், மொஹம்மத் எம், ரோஹித் ஆர், ஆதித்யா அருண், அபினவ் எம், சிலம்பரசன், திரிலோக் நாக், யாழ் அருண் மொழி, சுஜேந்திரன் எம், கௌஷிக் ஜே, என் ராமகிருஷ்ணன், ரா அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் எம் தோத்தாரி.

காஞ்சி வீரன்ஸ்:

லோகேஷ்வர் எஸ், விஷால் வைத்யா.கே, ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், சுப்ரமணிய சிவா, முகிலேஷ் யு, சுனில் சாம், எஸ் அருண், தீபன் லிங்கேஷ் கே, பிரான்சிஸ் ரோகின்ஸ் பி, சித்தார்த் எஸ், திவாகர் ஆர், மோகித் ஹரிஹரன்,எஸ் சந்திரசேகர், எஸ் அஷ்வத், யு விஷால், ஸ்ரீராம் சி.

திருச்சி வாரியர்ஸ்:

சோனு யாதவ், சஞ்சய் எம்எஸ், முரளி விஜய், சி.கணபதி, சுரேஷ் குமார் எஸ், வசந்த் சரவணன், அரவிந்த் எஸ், லக்ஷ்மி நாராயணன் எம், விக்னேஷ் எல், சந்திரசேகர், அஷ்வின் கிரிஸ்ட், மணி பாரதி கே, சரவண குமார் பி, ஏஎஸ் கோவிந்த ராஜன், ஆர்எஸ் திலக், வி ஆகாஷ்.

மதுரை பாந்தர்ஸ்:

வருண் சிவி, அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, தலைவன் சற்குணம், கௌஷிக், ஜகன்னாத், நிலேஷ், ரோஹித், எஸ்.பி.நாதன், துஷார் ராஹெஜா, கிரண் ஆகாஷ் எல், லோகேஷ் ராஜ், எஸ்எஸ் கர்னவர், விக்ரம் ஜாங்கிட், எம்எஸ் புரமோத், பிஎஸ் சிவராமகிருஷ்ணன்.

லைகா கோவை கிங்ஸ்:

ஆண்டனி தாஸ், நடராஜன் டி, அபினவ் முகுந்த், கே.விக்னேஷ், ஷாருக் கான் எம், அகில் ஸ்ரீநாத், சுரேஷ் குமார் ஜே, மிதுன் ஆர், சுரேஷ் பாபு, சுமந்த ஜெயின், ராஜேஷ் எம்பி, அஷ்வின் வெங்கடராமன், எம்.ராஜா, ஆர் சத்யநாராயணன், மொஹம்மத் அட்னன் கான், எஸ் மணிகண்டன்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

விஜய் ஷங்கர், கோபிநாத் கே ஹெச், எம்.அஷ்வின், ஹரீஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜு, சன்னி குமார் சிங், சம்ருத் பட், அருண் குமார் வி, விஷால் ஆர், ராகுல் பி, சித்தார்த் எம், அருண் பி, ஆரிஃப், எம் கே சிவகுமார், மனவ் பரக், சாய் சுதர்சன்.

டூட்டி பாட்ரியாட்ஸ்:

வாஷிங்டன் சுந்தர், கௌஷிக் காந்தி, சாய் கிஷோர் ஆர், ஆர்.சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன், அக்ஷய் ஸ்ரீனிவாசன், மாலோலன் ரங்கராஜன், ஆஷித் ராஜீவ், யு.சுஷில், தினேஷ் எஸ், அபிஷேக் எஸ், வெங்கடேஷ் ஏ, நிதிஷ் எஸ், ஆர் ஜேசுராஜ், எஸ் பூபாலன், எஸ் ஷுபம் மேஹ்தா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Here the full list of tnpl teams and players list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X