"என் தங்கையுடன் அவர் கட்டிலில் படுத்திருப்பார்" - இவ்ளோ ஓப்பனாவா பேசுறது மிஸ்டர் டு பிளசிஸ்? (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘He’s lying in bed with my sister’: Faf du Plessis on Hardus Viljoen - "என் தங்கையுடன் அவர் கட்டிலில் படுத்திருப்பார்" - இவ்ளோ ஓப்பனாவா பேசுறது மிஸ்டர் டு பிளசிஸ்? (வீடியோ)

‘He’s lying in bed with my sister’: Faf du Plessis on Hardus Viljoen - "என் தங்கையுடன் அவர் கட்டிலில் படுத்திருப்பார்" - இவ்ளோ ஓப்பனாவா பேசுறது மிஸ்டர் டு பிளசிஸ்? (வீடியோ)

நேர்மையாக இருக்கலாம்; ஆனால் இவ்வளவு நேர்மையாக இருக்கக் கூடாதுய்யா என்று தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் பேச்சு குறித்து சமூக வாசிகள் பீதி கலந்த அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தென்னாப்பிரிக்காவில் Mzansi சூப்பர் லீக் தொடரில் Paarl Rocks அணியின் கேப்டனாக டு பிளசிஸ் செயல்பட்டு வருகிறார்.

இதில், போலண்ட் பார்க்கில் நேற்று(டிச.08) நடைபெற்ற நெல்சன் மண்டேலா பே ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போட்டு அதை இழந்த பிறகு, தனது அணியின் பிளேயிங் XI குறித்து பேசிய டு பிளசிஸ்,  "எங்களது அணியில் ஹார்டஸ் வில்ஜோன் இன்று விளையாட மாட்டார். ஏனென்றால் அவர் இன்று என் சகோதாரியுடன் படுக்கையில் இருப்பார். இவர்கள் இருவருக்கும் நேற்று(போட்டிக்கு முதல் நாள்) தான் திருமணம் நடைபெற்றது" என்றார்.

டு பிளசிஸ் ஏதோ ஒரு காரணம் சொல்லப் போகிறார் என்று தலை அசைத்துக் கொண்டிருந்த வர்ணனையாளர், அவர் இந்த காரணத்தை சொன்ன பிறகு, ஒரு நொடி ஜெர்க் ஆகி சிரித்து அப்படியே சமாளித்துவிட்டார். 35 வயதான டு பிளெசிஸ் சகோதாரி ரெமி ரைனர், ஹார்டஸ் வில்ஜோனை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!.

Faf Du Plessis

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: