இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணையித்த 328 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 5-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. பிரின்பேனில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், ஆஸ்திரேலியாவின் 32 ஆண்டுகால சாதனைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். இது குறித்து கங்குலி தனது டவிட்டர் பக்கத்தில், இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி என்றென்றும் நினைவில் இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு சென்று வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் இந்த பரிசுத்தொகை வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
Just a remarkable win...To go to Australia and win a test series in this way ..will be remembered in the history of indian cricket forever ..Bcci announces a 5 cr bonus for the team ..The value of this win is beyond any number ..well done to every member of the touring party..
— Sourav Ganguly (@SGanguly99) January 19, 2021
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ஆஸ்திரேலயாவை வீழ்த்திய இந்திய அணிக்கு பிசிசிஐ 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. வெற்றி இந்திய அணியின் சிறப்பான தருணங்களில் இதுவும் ஒன்று என பதிவிட்டுள்ளார்.
The @BCCI has announced INR 5 Crore as team bonus. These are special moments for India Cricket. An outstanding display of character and skill #TeamIndia #AUSvIND #Gabba
— Jay Shah (@JayShah) January 19, 2021
இந்த வெற்றிக்காக இந்திய அணியை பாராட்டியுள்ள தென்ஆப்பரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ், என்ன ஒரு டெஸ்ட் மேட்ச் என ஆச்சரியாமாக பதிவிட்டுள்ளார். மேலும் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்டிற்கு புகழாரம் சூட்டிய அவர் பண்டின் ஜெர்சி எண்ணை குறிப்பிட்டு 17 இனிமையான நம்பர் என பதிவிட்டுள்ளார்.
What a Test match! The depth of Indian Cricket is scary. @RishabhPant17 , sweet number 17. Well played young man. #testcricket at its very best
— AB de Villiers (@ABdeVilliers17) January 19, 2021
இந்திய ஒருநாள் அணியின் தொடக்க ஆட்டகாரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பதிவில், வாழ்த்துக்கள், நீங்கள் அணைவருமே சூப்பர் ஸ்டாக்க மாறியுள்ளீர்கள். இது இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று தருணம். சாம்பியன்களில் அடித்நொறுக்கப்பட்ட வெற்றி என பதிவிட்டுள்ளார்.
Congratulations #TeamIndia ???????? Absolute superstars all of you ???????? A proud and historic moment for Indian cricket! Battered, bruised, but champions as well ????
— Shikhar Dhawan (@SDhawan25) January 19, 2021
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, சாம்பியன் அணியின் சிறந்த சேசிங். அணியின் கூட்டு முயற்சியால் சிறந்த அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பலர் காயத்தில் இருந்தாலும், இந்திய அணிக்கு வெற்றி சாத்தியமாகியுள்ளது. இது நாட்டுக்கு கிடைத்த வெற்றி. நாட்டின் தேசிய கொடி உயர பறக்க நாம் பாடுபடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
The champions & the greatest chase!????#TeamIndia has proved it again by team efforts, great character, courage & max determination! Despite the bruises, the team made it possible for our country. That’s why we play for the country’s flag to go high every time we perfom????????#INDvAUS
— Ishant Sharma (@ImIshant) January 19, 2021
இது நம்ப முடியாத வெற்றி.. என்ன ஒரு வெற்றி என பதிவிட்டுள்ள இந்திய வீரர் கருண் நாயர், இந்திய கிரிக்கெட்டுக்கு இது வரலாற்று நாள் அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ABSOLUTELY incredible! ???????? What a WIN! ????
Historic day for Indian cricket.
Congratulations #TeamIndia ???????????????? @BCCI
— Karun Nair (@karun126) January 19, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.