Indian Hockey: 13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியா, 'நம்பர் ஒன்' அணியான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, 6 முறை சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி அதன் முதல் போட்டியில் தென் கொரிய அணியை 4–2 என வீழ்த்தியது. அடுத்து ஸ்பெயின் அணியிடம் 1–4 என தோற்றது. மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் 10–1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை இந்தியா அபாரமாக வீழ்த்தியது.
கால் இறுதி மோதல்
இதையடுத்து, 6 புள்ளிகளுடன் படியலில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது. தற்போது இந்த தொடருக்கான கால் இறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ‘டி’ பிரிவில் முதலிடம் பிடித்த பலம் பொருந்திய நெதர்லாந்து அணியை இந்தியா இன்று (செவ்வாய்கிழமை) எதிர்கொண்டது.
விறுவிறு ஆட்டம்
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணியின் டிமோ போயர்ஸ் ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் கோல் அடித்து மிரட்டினார். இதன்பின்னர், அடுத்த பெனால்டி கார்னரில் பெபிஜின் வான் டெர் ஹெய்டன் ஆட்டத்தின் 16 நிமிடத்தில் கோல் அடிக்கவே இரண்டாவது கால் பாதி நேரம் முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என்கிற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தங்களது முயற்சியை கைவிடாது இந்திய ஜூனியர் வீரர்கள் போராடிய நிலையில், 3வது கால் பாதி நேரத்தில் ஆரைஜீத் சிங் ஹண்டால் உதவியுடன் 34வது நிமிடத்தில் கோல் அடித்து மிரட்டினார் இந்தியாவின் ஆதித்யா லாலாகே. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஆரைஜீத் லாலாகே பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் இந்தியாவுக்கு இன்னொரு கோல் அடித்து போட்டியை 2-2 என சமனுக்கு கொண்டுவந்தார்.
🇮🇳 India trail behind the Netherlands 🇳🇱 by two goals.
— Hockey India (@TheHockeyIndia) December 12, 2023
A fightback is expected in the second half. Stay tuned 🏑#HoxkeyIndia #IndiaKaGame #RisingStars #JWCMalaysia2023 pic.twitter.com/BmpUgvfsMA
இப்போது இந்தியா நெதர்லாந்து மீது அழுத்தத்தை போடவே, அவர்கள் மற்றொரு பெனால்டி கார்னரில் கோல் அடித்து அதனை சமாளித்தனர். நெதர்லாந்து அணியின் ஒலிவியர் ஹார்டென்சியஸ் 44வது நிமிடத்தில் கோல் அடித்து திருப்பு முன்னையை கொண்டு வந்தார். இதனால், மூன்றாவது கால் பகுதி நேர முடிவிலும் நெதர்லாந்து இந்தியாவை விட முன்னிலையில் இருந்தது.
கடைசி மற்றும் 4வது பகுதி நேரத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்திய வீரர்கள் போராட்ட ஆட்டத்திற்கு ஆயத்தமானார்கள். 52வது நிமிடத்தில் இந்தியாவின் ஆனந்த் குஷ்வாஹா கோல் அடித்து போட்டியை சம நிலை அடையை செய்தார். மறுபுறம் நெதர்லாந்து அணியும் துணிச்சலாக போராடி வந்தது.
இந்த நேரத்தில் இந்தியாவுக்கு மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கவே, 57வது நிமிடத்தில் கேப்டன் உத்தம் சிங் கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-3 என்கிற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இந்த த்ரில் வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
A historic victory as India come back from 2 down to clinch the game against the Netherlands to book their spot in the Semi Finals of the FIH Hockey Men's Junior World Cup Malaysia 2023.#HockeyIndia #IndiaKaGame #RisingStars #JWCMalaysia2023 pic.twitter.com/YFKv0p0jIs
— Hockey India (@TheHockeyIndia) December 12, 2023
Few highlights of the Match…!!! pic.twitter.com/VHvquMi7em
— Salman Mahfooz (@crpian05) December 12, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.