Advertisment

IND vs AUS: இந்தியா- ஆஸி., கிரிக்கெட் மொபைலில் லைவ் பார்த்த ரசிகர்கள் ஷாக்; என்ன ஆச்சு?

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியை நேரலையில் ஒளிபரப்பும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடங்கியது தொடர்பாக மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hotstar goes down during Ind-Aus 2nd Test, fans reactions Tamil News

Disney+Hotstar

Disney+Hotstar goes down during India vs Australia match Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்த நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னுடனும், கே.எல் ராகுல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸி., கிரிக்கெட் மொபைலில் லைவ் பார்த்த ரசிகர்கள் ஷாக்; என்ன ஆச்சு?

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடங்கியது. அதன் இணைய பக்கம் மற்றும் ஓடிடி தளம் என இரண்டுமே செயலிழந்தது. இப்போட்டியை மொபைல் மற்றும் பிற சாதனங்களில் நேரலையில் பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும், சமூக வலைதளமான ட்விட்டரில் தங்களின் புகார்களை அடுக்கி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

publive-image

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான அபினவ் முகுந்த், “நானா அல்லது ஹாட்ஸ்டாரா செயலிழந்து இருப்பது? எரர் ஏற்பட்டுள்ளதாக அது தொடர்ந்து கூறுகிறது, யாராவது அதை சரிசெய்தார்களா?" என்று ட்வீட் செய்துள்ளார்.

சமூக ஊடக சேவைகளின் செயலிழப்பைக் கண்காணிக்கும் டவுன்டெக்டரை மேற்கோள் காட்டியுள்ள ஒரு செய்தி நிறுவனம், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, நாக்பூர், ஐதராபாத், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்கள் அதிக செயலிழப்புகளைப் பதிவு செய்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

publive-image

இதற்கிடையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடங்கியது தொடர்பாக மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இப்படியொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Hotstar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment