India-vs-australia | ravichandran-ashwin: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய வருகிறது. நேற்று இந்தூரில் நடந்த போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சுழல் மன்னனான அஸ்வின் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னேவை க்ளீன் போல்ட் செய்து மிரட்டினார். அப்போது டக்-அவுட்டில் இருந்து அந்த காட்சியைப் பார்த்த வாஷிங்டன் சுந்தர் திகைத்துப் போனார். அஸ்வின் விரித்த சுழல் வலையில் சிக்கிக் கொண்ட லாபுஷாக்னே போல்ட்-அவுட் ஆகி கதிகலங்கிப் போனார். அதனை ரீப்ளே-வில் பார்த்துக்கொண்டிருந்த வாஷிங்டன் திகைத்துப் போய் கீழே குனித்தார். அவர் கொடுத்த அந்தப் பார்வை 'அங்கு என்ன நடந்தது? அஸ்வின் மார்னசுக்கு என்ன பந்து வீசினார்? இப்படி மார்னஸ் நிலைகுலைந்து போகக் காரணம் என்ன? என்பது போல் இருந்தது.
அதிர்ஷ்டவசமாக அங்கு ஸ்பின்-ஸ்லோ-மோ கேமரா இருந்தது. அது பல ஆங்கிள்களில் படம் பிடித்தது. அஸ்வின் தனது வழக்கமான கேரம் பந்தில் வலது கை பேட்ஸ்மேன்களிடம் இருந்து பந்தை பிரேக் செய்து, எதிர்பார்த்த சுழலுடன் ஆட்டமிழக்க செய்வார். அஸ்வின் இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்த ரிவர்ஸ் கேரம் பால் அது. வலது கை பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை எப்படி விரலால் பிடித்துள்ளார்கள் என்பதை கணிப்பார்கள். அதற்கு ஏற்றாற்போல் பேட்டை சற்று கோணலாக பிடிக்க தொடங்குவார்கள். இதனால், அஸ்வின் வேறு திட்டத்தை தீட்ட வேண்டியிருந்தது.
அதனால் அஸ்வின் மாற்றத்தை கொண்டு வர உழைத்தார். அவரது கேரம்பால் கைக்கு முன்னால் இருந்து பறக்கும்; இப்போது இந்த ரிவர்ஸ் கேரம்பால் மூலம், அவர் பந்தை பேக்ஸ்பின் செய்யத் தொடங்கினார். பந்தை நேராக்க தனது விரலை மடிப்புக்கு அடியில் சறுக்கி கட் செய்தார். "இது பேக்ஃபிளிப்பர், இது எனக்கு இடது கையிலிருந்து விலகி வலது கைக்கு நகர்த்துகிறது. சில சமயங்களில் நான் பந்தின் தையலுக்கு அடியில் பிடித்திருக்கி றேன்,” என்று அவர் ஒருமுறை ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் கூறினார். அந்த பந்தின் லைவ் டெமோவைத்தான் அஸ்வின் லாபுஷாக்னேவிடம் சோதித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: - Two variations of carrom ball: How Ashwin knocked out David Warner, Marnus Labuschagne, and Josh Inglis
லாபுசாக்னேவைப் பொறுத்தவரையில், அவர் ஆஃப் சைடில் விளையாட நினைக்கவில்லை. அது வழக்கமாக வெளியில் செல்லும் கேரம்பால் அல்ல என்று பார்த்ததாலா அல்லது ரிலீஸை பார்க்காமல் இருந்ததாலா? என்னவோ, அஸ்வின் சரியான ஃபினிஷிங் கொடுத்தார். அஸ்வினின் பந்தை பார்த்த லாபுசாக்னே கிரீஸுக்குள் நகர்ந்தார். அஸ்வின் சொன்னது போல், ஒரு டச் அடித்த பந்து நேராக ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இதனைப் பார்த்த வாஷிங்டன் சுந்தர் திகைத்துப் போயிருக்கலாம்.
அஸ்வின் மற்றும் டேவிட் வார்னர் இடையே லாபுஷாக்னேவைச் சுற்றி நடந்தது மிகப்பெரிய போர். பொதுவாக, கிரிக்கெட் ஹைலைட்ஸ்களை ஒளிபரப்பு செய்யும் ஓ.டி.டி தளங்கள் சில தருணங்களை தெளிவாக காட்டுவதில்லை. ஆனால் ஜியோசினிமாவில் இது மிகவும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. Ashwin outsmarts Righty Warner’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது எல்லா சிறிய தருணங்களையும் படம்பிடிக்கிறது. பேட் கம்மின்ஸ் செய்தியுடன் களத்தில் ஓடிய உடனேயே வார்னர் எப்படி பேட்டிங்கிற்கு மாறினார்; வலது கை பேட்ஸ்மேனைப் போல அவர் எப்படி ஒரு பவுண்டரியை அடித்து ஆஸி டக்-அவுட்டில் பெரும் சிரிப்பலையைத் தூண்டினார். பின்னர் அஷ்வினின் வலையில் சிக்கி வெளியேறினார் என்பதனை காட்டுகிறது.
இது வழக்கமான கேரம் பால், ஆனால் வார்னர் அதை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். அதாவது அவர் நிலைகளை மாற்றிய பின் இடது கை வீரரைப் போல விளையாடினார். ஆனால் அது அவரை சிக்க வைக்கச் சுழன்றது. சுவாரசியமாக அண்டர்-எட்ஜ் இருந்ததால் வார்னர் டிஆர்எஸ்-க்கு செல்லவில்லை. ஆனால் அவர் தனது பேட்டை வீசிய நேரத்தில் அவர் தரையில் சரிந்தார், ஒருவேளை அதை உணரவில்லை. அவர் எல்.பி.டபிள்யூ பற்றி தனது பார்ட்னருடன் ஆலோசனை செய்து, பின்வாங்கினார்.
சில பந்துகளுக்குப் பிறகு ஜோஷ் இங்கிலிஸை வெளியேற்றுவதற்கு மற்றொரு கனவான பந்தான பேக்ஸ்பின்னிங் ரிவர்ஸ் கேரம்பால் போட்டார். மீண்டும், அண்டர்கட் பேக் ஸ்பின்னிங் ரிலீஸ், மற்றும் பந்து வெளியில் இருந்து வலது கைக்கு வளைந்து மிடில் மற்றும் ஆஃப் மீது தரையிறங்குகிறது, பின்னர் நேராகிறது. அதுவும் மிகவும் நிரம்பியிருந்தது, மேலும் அந்த லென்ந்த் இங்கிலிஸ் எல்.பி.டபிள்யூ ஆக்கி, அவர் அடிக்க உத்தேசித்த ஸ்வீப்பை முறியடித்தது.
இது அஸ்வினின் சிறந்த ஒருநாள் ஸ்பெல்களில் ஒன்றாகும். மேலும் உலகக் கோப்பைக்காக இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு பரபரப்பான வீரர்கள் தேர்வு அழைப்பை வழங்கியுள்ளது. அவர்கள் அஸ்வினை விரும்புவார்களா அல்லது அக்சர் படேல் உடற்தகுதி பெற்று அவரது பேட்டிங் திறனுக்கு தயாராகிவிடுவார் என்று நம்புவார்களா? பிட்ச் டர்ன் செய்ய உதவியது என்றால், அஸ்வின் பேட்ஸ்மேனாக செய்யும் திறன் அதிகம். ஆசிய கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான தனது சிறப்பான பேட்டிங் மூலம் அக்சர் படேல் தன்னை நிரூபித்துக் காட்டினார். தற்போது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் என்ன முடிவு செய்வார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“