கருப்பு மண் பிட்ச்; உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸி., முதலில் பேட் செய்ய மறுக்க இதுதான் காரணம்: அஸ்வின்

ஆஸ்திரேலியா அதன் வரலாற்று ரீதியாக இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர்களின் முடிவால் அனைவரையும் திகைக்க வைத்தனர் எனவும் அஸ்வின் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா அதன் வரலாற்று ரீதியாக இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர்களின் முடிவால் அனைவரையும் திகைக்க வைத்தனர் எனவும் அஸ்வின் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
How Aussies stunned R Ashwin and India in World Cup 2023 final Tamil News

லக்னோவில் நடந்த தென்னாப்பிரிக்கா ஆட்டம், சிவப்பு மண்ணில் விளையாடியது, சிவப்பு மண் பரப்புகளில் முதலில் பேட் செய்வது நல்லது என்பதை ஆஸ்திரேலியா உணர உதவியது.

Ravichandran-ashwin | worldcup 2023 | india-vs-australia:இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 10 போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையில் உறைய வைத்தது. 

அஸ்வின் வியப்பு 

Advertisment

இந்நிலையில், ஆஸ்திரேலியா அதன் வரலாற்றைப் பின்பற்றி இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் தங்கள் முடிவால் அனைவரையும் திகைக்க வைத்தனர் என்றும் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த மூத்த சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "விதியினாலோ அதிர்ஷ்டத்தினாலோ ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். அவர்கள் தந்திரோபாயமாக இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். ஆஸ்திரேலியா என்னை ஏமாற்றிவிட்டது. டாஸ் வென்றால் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வார்கள் என்று தான் நினைத்தேன். ஏனெனில் வரலாற்று ரீதியாக, ‘டாஸ் வென்று பேட்டிங் செய்வது’ அந்த அணி வழக்கமாக கொண்டுள்ளது. இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட விக்கெட் அகமதாபாத் மண்ணல்ல, மாறாக ஒடிசாவைச் சேர்ந்தது. அதிகம் சிதையாத விக்கெட் அது.

Advertisment
Advertisements

மிட் இன்னிங்ஸின் போது நான் ஆடுகளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போதுதான் ஆஸ்திரேலியாவின் தேர்வாளர்களின் தலைவரான ஜார்ஜ் பெய்லியை சந்தித்தேன். அப்போது ஆஸ்திரேலியா ஏன் பேட்டிங்கைத் தேர்வு செய்யவில்லை என்று நான் ஆர்வமாக அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், இது கருப்பு மண்ணின் விக்கெட் என்பதால் முதலில் பந்து வீசத் தேர்வு செய்தார்கள் என்றும், இதுபோன்ற ஆடுகளத்தில் பொதுவாக மாலையில் பேட்டிங் செய்வது நல்லது.  

லக்னோவில் நடந்த தென்னாப்பிரிக்கா ஆட்டம், சிவப்பு மண்ணில் விளையாடியது, சிவப்பு மண் பரப்புகளில் முதலில் பேட் செய்வது நல்லது என்பதை ஆஸ்திரேலியா உணர உதவியது. ஆனால், பனி பொழியும் போது பந்து நன்றாக சறுக்குவதால் கருப்பு மண் பரப்புகளில் துரத்துவது எப்போதும் நல்லது எனவும் பதிலளித்தார்" என்று அஸ்வின் கூறினார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Ravichandran Ashwin Worldcup India Vs Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: