Advertisment

இலங்கையை சம்பவம் செய்த ஆப்கான்... அரைஇறுதிக்கு எப்படி தகுதி பெறலாம்?

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணியின் அபார வெற்றிக்குப் பிறகு அவர்களது உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
How Can Afghanistan Reach 2023 WC SemiFinal After Win vs Sri Lanka tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடனும், -0.718 என்கிற நெட் ரன்ரேட்டுடனும் ஆப்கானிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது.

worldcup 2023 | afghanistan-vs-sri-lanka: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை புனேவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 

Advertisment

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பெற்ற 3வது வெற்றியை ருசித்தது. அந்த அணி முன்னதாக இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை வீழ்த்தி இருந்தது. தற்போது மற்றொரு சாம்பியன் அணியான இலங்கையும் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

ஆப்கான் அரைஇறுதிக்கு எப்படி தகுதி பெறலாம்?

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணியின் அபார வெற்றிக்குப் பிறகு அவர்களது உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு எப்படி உள்ளது என்றும், என்ன செய்தால் அவர்கள் தகுதி பெற முடியும் என்பதையும் இங்கு சுருக்கமாக பார்க்கலாம். 

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 6 தொடர் வெற்றிகள் மூலம் 12 புள்ளிகளுடன் இந்தியா (+1.405) புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா (+2.032) 2ம் இடத்திலும், தலா 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து (+1.232) மற்றும் ஆஸ்திரேலியா (+0.970) 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன. 

இந்த அணிகளுக்கு அடுத்தாற்போல் 6 புள்ளிகளுடனும், -0.718 என்கிற நெட் ரன்ரேட்டுடனும் ஆப்கானிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அந்த அணி ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்க உள்ளது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் புள்ளிகள் பட்டியலில் டாப் 4 இடத்தில் உள்ளன. 

ஆப்கானிஸ்தான் அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவை விட நெட் ரன்ரேட்டை உயர்த்தினால், ஆஸ்திரேலியா அதன் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி விடும். 

ஆப்கானிஸ்தான் மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியுற்றால் கூட, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும் என்றும், அவர்களின் நெட் ரன்ரேட் சரிய வேண்டும் என பிராத்திக்கும் சூழல் ஏற்படும். 

மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், மீதமுள்ள 3 போட்டிகளில் 2ல் வென்று அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் வெற்றி பெற்றால், நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தென் ஆப்பிரிக்காவும் தோல்வியடைய வேண்டும் என ஆப்கானிஸ்தான் நம்ப வேண்டும். 

ஆப்கானிஸ்தானுக்கு எஞ்சியுள்ள போட்டிகள்:- 

ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து - நவம்பர், 3 - லக்னோ
ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - நவம்பர் 7, மும்பை
ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா - நவம்பர் 10, அகமதாபாத். 

ஆப்கானிஸ்தான் அணி முந்தைய இரண்டு உலகக் கோப்பைகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்று இருந்தது. ஆனால் நடப்பு உலகக் கோப்பையில் ஏற்கனவே 3 ஆட்டங்களை வென்று வீறுநடை போட்டு வருகிறது. மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இன்னும் பல வரலாற்றுச் சாதனைகளை படைக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Afghanistan vs Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment