IPL 2023 - Playoffs Qualification Scenarios for CSK Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றி, 5ல் தோல்வி என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னையின் நெட் ரன்ரேட் +0.329 ஆகவும் உள்ளது.
11 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள லக்னோ அணியின் நெட் ரன்ரேட் +0.639 ஆக உள்ளது. 10 புள்ளிகளுடனும், +0.800 நெட் ரன்ரேட்டுடனும் ராஜஸ்தான் அணி 4வது இடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடனும், +0.532 ரன்ரேட்டுடனும் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை மோதிய லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், இந்த ஆட்டத்தில் முடிவு எடுத்தப்படவில்லை. போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோப்பைக்காக 10 அணிகளும் போராடுவதால், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சூழ்நிலையும் கடந்த ஆண்டிலிருந்து கடினமாகிவிட்டது. முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு இப்போது 7 வெற்றிகள் போதாது என்கிற சூழல் நிலவுகிறது. எனவே, சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, அந்த அணி எதிர்கொள்ளவிருக்கும் போட்டிகள் மிகவும் கவனமாக இருக்கும்.
தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உள்ள வாய்ப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சென்னை அணி இதுவரை எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளது? புள்ளி அட்டவணையில் அவர்களின் நிலை என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
எந்தெந்த அணிகளுக்கு எதிராக சி.எஸ்.கே-வின் போட்டிகள் எஞ்சியுள்ளன?
சென்னை அணி அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியை சனிக்கிழமை (மே 6) தனது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. அவர்களின் கடைசி மூன்று ஆட்டங்கள் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக இரண்டு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஒரு முறையும் நடக்க உள்ளன. இரு அணிகளும் தற்போது புள்ளிப் பட்டியலில் கீழ் பாதியில் உள்ளன.
பிளேஆஃப்-க்கு தகுதி பெற சென்னை அணி என்ன செய்ய வேண்டும்?
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 3 வெற்றிகளுடன், சென்னை அணி 17 புள்ளிகளை எட்டுவார்கள். அது முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கு போதுமானதாக இருக்கும். கடைசி நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட அவர்களால் வெற்றி பெற முடியும். ஆனால், அவர்கள் மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்து இருக்க வேண்டும். லக்னோ அணியைத் தவிர பெரும்பாலான அணிகளின் நெட்ரன்ரேட் இப்போது சென்னை அணிக்கு இணையாக வராமல் போகலாம். கடைசி ஆட்டம் கைவிட்டதால் அவர்களுக்கு கிடைத்த ஒரு புள்ளி கிடைத்தது.
சிஎஸ்கே முதல் 2 இடத்துக்கு வருமா?
கட்டுப்படுத்தக்கூடியவற்றைக் கட்டுப்படுத்தினால் சென்னனை அணி முதல் 2 இடத்துக்கு வரலாம். மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றால், 19 புள்ளிகளுடன் முடிவடையும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பிடிக்க அதுவே போதுமானதாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.