Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா தமிழ் தலைவாஸ்?
நடப்பு புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 17 போட்டிகளில் 7ல் வெற்றி, 10ல் தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப்க்கு முன்னேற முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கு தமிழ் தலைவாஸ் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அப்படி அந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட தமிழ் தலைவாஸ் பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா? என்பதில் சந்தேகம் தான் நிலவுகிறது.
தமிழ் தலைவாஸ் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தொடர்ச்சியாக அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறி சென்றது. ஆனால், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 27 - 42 என 15 புள்ளிகள் வித்தியாசத்தில் பரிதமாக தோல்வியடைந்தது. இதனால், 9வது இடத்துக்கு சரிந்தது.
தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகளை தவிர்த்து விட்டு, 6வது இடத்துக்கு தமிழ் தலைவாஸ் அணி முன்னேற எத்தனை அணிகளுடன் போட்டி போட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
6வது இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயன்ட்ஸ், 7 மற்றும் 8வது இடங்களில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களுரு புல்ஸ் அணிகளுடன் தமிழ் தலைவாஸ் போட்டி போட வேண்டும். அத்துடன் 10வது இடத்தில் இருக்கும் யு மும்பா உடனும் போட்டியிட வேண்டும்.
தமிழ் தலைவாஸ் அணி உட்பட 5 அணிகளும் 40 முதல் 50 புள்ளிகள் வரை பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு இன்னும் 6 அல்லது 5 லீக் போட்டிகள் மீதமுள்ளன. அதனால், இந்த 5 அணிகளுமே 65 புள்ளிகளுக்கு மேல் கூட பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த அணிகளில் யாருக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் என்பது கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரை, இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே-ஆஃப் வாய்ப்புக்கு அதன் நிலை மிகவும் மோசமாகிவிடும். அத்துடன் பெரும் பின்னடைவை சந்திக்கும். மற்ற பெரிய அணிகள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி தொடரில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 30-42 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவிய நிலையில், ப்ளேஅப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
முன்னதாக, இரவு 8 மணிக்குநடைபெற்ற பெங்களூரு புல்ஸ் - யு மும்பா அணிகள் மோதிய ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.