பாகிஸ்தான் வெளியேறினால் நிச்சயமாக இந்தியாவில் நடக்கும் போட்டிக்கான கதவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக திறக்கும்.
West Indies scenario World Cup Qualifier Tamil News: 13வது ஒருநாள் உலகக்கோப்பை 2023 (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது.
Advertisment
தகுதி சுற்று
இந்த தகுதி சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் நிலையில், அதில் 10 அணிகள் கலந்துகொண்டன. இந்த 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இந்த அணிகளில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இதுவரை நடந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. எனவே, இந்த அணிகள் தான் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
இதனால், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் போன்ற அணிகள் வெளியேறும். 2 முறை சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றில் முதல்முறையாக வெளியேறும் அபாயம் ஏற்படும். அந்த அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட நிலையில், தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு தற்போது கூடுதலாக அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisements
சூப்பர் 6 சுற்று
சூப்பர் 6 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியுற்றது. அதனால் அந்த அணி வெற்றிக் கணக்கை தொடங்காமல் பூஜ்ஜிய புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கூட அவர்களால் 4 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஏற்கனவே 6 புள்ளிகளுடன் இருப்பதால் அவர்களுக்கு இது போதாது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் எப்படித் தகுதிபெற முடியும்?
வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும். ஆனால் அது பாகிஸ்தான் அணியின் கையில் தான் உள்ளது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் தற்போது பங்கேற்க தங்கள் அரசாங்கத்திடமிருந்து அனுமதியை எதிர்பார்க்கிறது. இதேபோல், அந்த அணி இந்தியாவில் விளையாடும் மைதானங்களுக்கும் அனுமதி கோரி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறினால், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து 3வது சிறந்த அணி, இரு அணிகளுடன் சேர்ந்து உலகக் கோப்பை சுற்றுக்கு வரும். எனவே, முதல் மூன்று இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தால், உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம்.
வெஸ்ட் இண்டீஸ் எப்படி முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியும்?
தற்போது நடந்து வரும் சூப்பர் 6 சுற்றில் புள்ளிகள் எதுவும் எடுக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று, மற்ற முடிவுகளைச் சார்ந்து இருந்தால் மட்டுமே முதல் மூன்று இடங்களைப் பெற முடியும்.
மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தவரை, ஸ்காட்லாந்து அல்லது நெதர்லாந்தில் ஒன்று மட்டுமே அதிகபட்சமாக நான்கு புள்ளிகளைப் பெற வேண்டும். பின்னர் அவர்கள் அந்த அணியை நெட்ரன் ரேட்டில் முந்த வேண்டும்.
ஸ்காட்லாந்து ஏற்கனவே நான்கு புள்ளிகளுடன் உள்ளது. பாகிஸ்தான் உதவியிருந்தாலும் மற்றொரு வெற்றி வெஸ்ட் இண்டீஸ்க்கு உதவும். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை, ஸ்காட்லாந்து ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக இரண்டையும் இழக்க வேண்டும். நெதர்லாந்து ஓமனிடம் தோல்வியடைய வேண்டும். இப்படி நடந்து, பாகிஸ்தான் வெளியேறினால் நிச்சயமாக இந்தியாவில் நடக்கும் போட்டிக்கான கதவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக திறக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil