sports | cricket: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்தியா அபார வெற்றி
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று மீண்டும் தொடங்கி நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. அதிரடியாக சதம் விளாசிய கோலி 122 ரன்களும், ராகுல் 111 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர், 357 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டும் தோல்வியுற்றது. பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஆசியக் கோப்பை: பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா எப்படி உதவலாம்?
சூப்பர் 4 சுற்றில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா +4.560 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இலங்கை அணி (+0.420) பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டை விட (-1.892) அதிகமாக உள்ளது. இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் உயிர்ப்புடன் இருக்க பாகிஸ்தான் தனது கடைசி சூப்பர் 4 போட்டியில் இலங்கையை வீழ்த்த வேண்டும். இந்தியா தனது மீதமுள்ள இரண்டு சூப்பர் ஆட்டங்களில் (இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக) வெற்றி பெற்றால், சூப்பர் 4 புள்ளிகளில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால், நடப்பு சாம்பியனான இலங்கை அணி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம். வங்கதேசத்திடம் இந்தியா தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்தியா செவ்வாய்க்கிழமை இலங்கையை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், நெட் ரன் ரேட் நடைமுறைக்கு வராது. மேலும் இறுதிப் போட்டியாளரைத் தீர்மானிக்க அவர்கள் இலங்கையுடன் கால் இறுதிப் போட்டியில் விளையாடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.