worldcup 2023 | pakistan | indian-cricket-team: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணிகள் மோதின.மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் (-0.024 நெட் ரன்ரேட்) புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருந்தது. அதுநேரத்தில் வங்கதேசம் அரையிறுதிக்கான போட்டியிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How Pakistan would need a helping hand from India and Afghanistan to reach the semifinals
பாகிஸ்தான் தற்போதைய நிலை
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 3ல் வென்றுள்ள பாகிஸ்தான் (6 புள்ளிகள் / -0.024 நெட் ரன்ரேட்) ஆப்கானிஸ்தானை முந்தி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் 6 புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன்ரேட் உடன் 6வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாட உள்ளது. அதில் அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
அவர்களின் தலைவிதி அவர்கள் கையில் இருக்கிறதா?
இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், 10 புள்ளிகள் தான் பாகிஸ்தான் பெறக்கூடிய அதிகபட்ச புள்ளிகளாக இருக்கும். எனவே, அவர்கள் அரையிறுதிக்கு முன்னேற மற்ற அணிகளின் உதவியை எதிர்பார்த்து இருப்பார்கள்.
முதலில் இந்தியா வெற்றி பெற பிராத்தனை
நாளை வியாழக்கிழமை அன்று மும்பையில் இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் பாகிஸ்தான் பிராத்தனை செய்யும். இந்தியா வெற்றி பெற்றால், அது இலங்கையை அரையிறுதிக்கான போட்டியாளர் அணிகளில் இருந்து வெளியேற்றி விடும்.
பின்னர் ஆப்கான் தோல்வி அடைய பிராத்தனை
ஆப்கானிஸ்தான் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட போதாது.
எனவே, பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். பின்னர், ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். அது அவர்களை 8 புள்ளிகளுடன் வைத்திருக்கும். ஆப்கானிஸ்தான் இரண்டு வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றால், இப்போது நெட் ரன்ரேட் முக்கிய காரணியாக இருக்கும்.
அது போதுமா?
இல்லை. குறிப்பாக புள்ளிகள் அட்டவணையில் 2, 3 மற்றும் 4 இடங்களில் உள்ள அணிகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு கூடுதல் உதவி தேவைப்படும். அரையிறுதிக்கு முன்னேற தென்னாப்பிரிக்காவுக்கு (10 புள்ளிகள்) இன்னும் ஒரு வெற்றி தேவை. அதே சமயம், எந்த தொந்தரவும் இல்லாமல் செல்ல நியூசிலாந்து (8 புள்ளிகள்) மற்றும் ஆஸ்திரேலியா (8) அணிகளுக்கு இன்னும் இரண்டு வெற்றிகள் தேவை.
இந்த அணிகளில், பாகிஸ்தான் நியூசிலாந்துடன் விளையாட உள்ளது. அதில் பாகிஸ்தான் அவசியம் வெல்ல வேண்டும். தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து மோதும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் நினைக்கும். இதேபோல், இலங்கையிடமும் நியூசிலாந்து தோல்வியுற வேண்டும் என பிராத்திக்கும்.
நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அல்லது இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றால் 10 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
வேறு யாராவது பாகிஸ்தானுக்கு உதவ முடியுமா?
நிச்சயமாக, தென் ஆப்பிரிக்கா எஞ்சியிருக்கும் எந்தப் போட்டியிலும் வெற்றிபெறவில்லை என்றால், அவர்கள் 10 புள்ளிகளுடன் முடிப்பார்கள். அது பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவும் 10 புள்ளிகளுடன் முடித்தால் பாகிஸ்தானுக்கு உதவலாம். இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்த அணிகளுடன் அவர்களுக்கு சாவால் சற்று எளிதானதாக இருக்கும்.
பாகிஸ்தானின் பார்வையில், அவர்களுக்கு ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திடம் தோற்க வேண்டும். இது அவர்களை 10 புள்ளிகளில் வைத்திருக்கும். பின்னர் நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
மீதமுள்ள பாகிஸ்தானுக்கு கையில் இருக்கும் போட்டிகள்:
இந்தியா: இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து
தென் ஆப்பிரிக்கா: நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான்
நியூசிலாந்து: தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை
ஆஸ்திரேலியா: இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்
பாகிஸ்தான்: நியூசிலாந்து, இங்கிலாந்து
ஆப்கானிஸ்தான்: நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.