Advertisment

ஒட்டுமொத்தமாக சொதப்பிய மும்பை... சொந்த மண்ணில் ரசிகர்களை ஏமாற்றியது எப்படி?

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கியபோது மும்பையின் ராஜா யார்? என்கிற ராம்கோபால் வர்மாவின் சத்யா படத்தின் டயலாக் ஒலிக்க, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், ஹிட்மேன்... ரோகித் சர்மா... என முழக்கமிட்டனர்.

author-image
WebDesk
New Update
How Mumbai Indians collectively combusted to disappoint home fans IPL 2024 Tamil News

சொந்த மைதான ரசிகர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்காக ஓரிரு சிக்ஸர்களை பறக்க விட்ட திலக் வர்மா, அந்த அதிரடியை கடைசி வரை தொடர முடியாமல் வீழ்ந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mumbai Indians | Hardik Pandya | Rohit Sharma | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 125 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை 15.3 ஓவரிலே எட்டிப்பிடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மும்பை பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய  ரியான் பராக் (54 ரன்கள்) ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். சொந்த மண்ணில் வெற்றிக்கணக்கை தொடங்கும் என எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2024: How Mumbai Indians collectively combusted to disappoint home fans

ரோகித்தை வரவேற்ற ரசிகர்கள் 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் செய்வதாக அறிவித்த நிலையில், மும்பை அணி பேட்டிங் ஆட களம் கண்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். மும்பையின் ராஜா யார்? என்கிற ராம்கோபால் வர்மாவின் சத்யா படத்தின் டயலாக் ஒலிக்க, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், ஹிட்மேன்... ரோகித் சர்மா... என முழக்கமிட்டனர். அவருக்கான பலத்த வரவேற்பும், ஆதரவான ஆரவாரமும் அவர் மட்டைச் சுழற்றும் வரை விடமால் ஒலித்துக் கொண்டே இருந்தது. கார்டை எடுத்த ரோகித் இங்கும் அங்குமாக பார்த்தார். பந்து வீச்சாளரைப் பார்த்து, அவர் இன்னும் செட்டில் ஆகவில்லை என்பதை வெளிப்படுத்தினார். 

கூச்சல்கள் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் இன்னும் அதிரடியாக மட்டைச் சுழற்றாமல் இருந்தார் ரோகித். ஆட்டத்தின் முதல் ஓவர் போட வந்த டிரென்ட் போல்ட் தனது துல்லிமான வேகப் பந்துவீச்சில் மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் ஆப்-சைடில் விரட்ட நினைத்த பந்து எட்ச் ஆகி விடவே, எச்சரிக்கையாக இருந்த சஞ்சு சாம்சன் வேகமாக டைவ் அடித்து கேட்ச் செய்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்த பந்தில் போல்ட் மும்பையின் நமன் திரை எல்.பி.டபிள்யூ.-வில் சிக்க வைத்தார். இப்போது ஸ்கோர்போர்டில் ரன்களை விட விக்கெட் தான் அதிகமாக 1-(1 ஓவர்) என இருந்தது. 

களத்தில் கேப்டன் பாண்டியா - அமைதியான ரசிகர் கூட்டம்

அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்க, வான்கடே மைதானம் ஸ்பெஷலுக்குத் தயாராக இருந்தது. கேப்டன் பாண்டியா தனது வீரத்தால் அவருக்கு எதிராக முழக்கமிட்ட ரசிகர் கூட்டத்தை எப்படி வென்றார் என்பதற்கான விசித்திரமான காதல் கதை போல் இருந்தது. கதை விறுவிறுப்பாக தொடங்கினாலும் மொக்கை கிளைமாக்ஸால் புஸ்வானமாகியது. 

டாஸின் போது கேப்டன் பாண்டியா அவருக்கு எதிரான ரசிகர்களின் முழக்கத்தை எதிர்கொண்டார். மீண்டும் அவர் பேட்டிங் ஆட வந்தபோதும், ஸ்டேடியம் ஸ்பீக்கர்களில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோதும், அவர் தனது முதல் பந்து வீச்சை எதிர்கொண்டபோதும், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எதிரான முழக்கம் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

ஆனால், 4 பந்துகளுக்குப் பிறகு, ஒரு ஸ்லைஸ்டு டிரைவ் மூலம் கேப்டன் பாண்டியா அவர்களை அமைதிப்படுத்தினார். அடுத்த பந்தில், நாந்த்ரே பர்கரின் பேக்-ஆஃப்-லெங்த் டெலிவரியை கவர்-பாயிண்ட் மூலம் அடிக்க அவர் டிராக்கில் இறங்கி வந்தபோது, ​​மும்பை இந்தியன்ஸ் கொடிகளை அசைத்தபடி அவர்களை எழுந்து நின்று ஆரவாரம் செய்ய வைத்தார். இரண்டு பந்துகள் பின்னர், அவர் பிங் லாங்-ஆனில் அடித்து நொறுக்கிய போது, ரசிகர்களை ஓலமிட செய்தார்.  சிறிது நேரம் கழித்து, அவரை ஆதரித்த தனது யூடியூப் சேனலில் பேசிய ஆர் அஷ்வின் வீசிய பந்துகளை அதிரடியாக விரட்ட  ரசிகர்களைக் கிண்டல் செய்தார். சில கேரம் பந்துகளில் நழுவிய அவர், ஆஃப்-சைடில் சில பவுண்டரிகளை விரட்டி மிரட்டலாக ரன்களை சேர்த்தார். அப்போது அவருக்கு ஆதரவான முழுக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.   

இதன்பின்னர், ராஜஸ்தானின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் வீசிய 8வது ஓவரில் பாண்டியா வெளுத்து வாங்கினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் சாஹல் தனது அடுத்த ஓவரில், இன்னிங்ஸின் 10வது ஓவரில், பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தினார். சாஹலின் துணிச்சலும் தந்திரமும் பலனளித்தது, பந்தை லாங்-ஆனில் பறக்க விட முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது  ரசிகர் கூட்டம் அமைதியானது.

அவர் விளையாட்டிலும் கூட்டத்திலும் மற்றொரு சுருக்கமான தோல்வியுற்ற தாக்கத்தை ஏற்படுத்தினார். ராஜஸ்தானின் சேசிங் போது நான்காவது ஓவரில், ஜோஸ் பட்லருக்கு பும்ரா வீசிய பந்தில், மிட்-ஆஃபில் இருந்த பாண்டியா ஒரு அற்புதமான டைவ் அடித்து கேட்ச் எடுத்தார். ஆனால், பந்து தரையில் குத்தி விட்டது. ரசிகர் கூட்டத்தின் மகிழ்ச்சியும் திடீரென துண்டிக்கப்பட்டது. 

இஷான்  அவுட் - பெருமூச்சு விட்ட ரசிகர் கூட்டம் 

நேற்று மும்பை தொடக்க வீரர் இஷான் கிஷனின் இரவாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவர் தனது 2 அதிரடி பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரால் ரசிகர்களை உற்சாகமூட்டினார். குறிப்பாக, லெக்-சைடில் அவர் விளாசிய சிக்ஸர் பார்க்கவே அற்புதமாக இருந்தது. 

வெளியேறிய வர்மா - ரசிகர்கள் எதிர்ப்பு

சொந்த மைதான ரசிகர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்காக ஓரிரு சிக்ஸர்களை பறக்க விட்ட திலக் வர்மா, அந்த அதிரடியை கடைசி வரை தொடர முடியாமல் வீழ்ந்தார்.  இந்த நேரத்தில், சாஹல் பாண்டியாவை வீழ்த்தி நம்பிக்கையுடன் இருந்தார். 14-வது ஓவரில் ஷார்ட் பந்தை பறக்கவிட்ட வர்மா, அடுத்தது சாஹல் வீசிய கிளாசிக் பந்து, இது  ஒயிடு லைனில் நன்றாக வெளியில் செல்லும் பந்து வீச்சு, பின்னோக்கிப் பார்த்தால், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதைத் தனியாக விட்டுவிட்டால் ஒயிடாக இருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் அவர்களால் ஒருபோதும் முடியாது. அதனை கட் செய்து ஆடாமல் வர்மாவாலும் இருக்க முடியவில்லை. அப்போது அஷ்வின் ஸ்மார்ட் லுங்கிங் கேட்சை எடுக்க சரியான நேரத்தில் நகர்ந்து ஷார்ட் தெர்டில் இடதுபுறமாக அதைச் சுழன்று வந்து பிடித்தார். 

அதன்பிறகு, மும்பை வீரர்கள் யாரும் ஆட்டமிழக்கமால் இருக்கும்படி மட்டுமே பார்த்துக் கொள்ள முடிந்தது. ராஜஸ்தானின் சேசிங் போது அவர்கள் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தாலும், தனது முதிர்ச்சியடைந்த ஆட்டத்தால் ரியான் பராக், அஷ்வினுடன் 40 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். மீண்டும் 5வது இடத்தில் பேட்டிங் செய்து, அதிக சலசலப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். அத்துடன் அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rohit Sharma Mumbai Indians Hardik Pandya IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment