10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்கும் காலக்கெடு நேற்று வியாழக்கிழமையுடன் (அக்.31) முடிவடைந்தது.
அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன. இதில் அனைவரும் எதிர்பார்த்த 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. இதன்படி ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How Mumbai Indians retained Hardik Pandya, Suryakumar Yadav, Rohit Sharma and Jasprit Bumrah
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், தங்களின் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திர வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது என்பது குறித்து இங்குப் பார்க்கலாம்.
கொல்கத்தா, லக்னோ, டெல்லி, பெங்களூரு அணிகள் தங்கள் அணிக்கான கேப்டனைத் தேடி வரும் நிலையில், தங்களது முக்கிய வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ். அந்த அணிக்கு, இது எளிதான காரியம் அல்ல. கடந்த இரண்டு மாதங்களில், ஒரு கட்டத்தில், கேப்டன்சி மாற்றம் குறித்து கூட பேசியதாக தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அது புரியும்படியாக இருந்தது. ஏனெனில், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி கடந்த 2024 சீசனில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு விதிவிலக்கான கேப்டன்சி விருப்பங்கள் இருந்தன.
தற்போது, மும்பை அணியின் தக்கவைப்பு வரிசை சிறந்த சமநிலை மற்றும் நுணுக்கமான சிக்னலை காட்டுகிறது. உலகின் சிறந்த ஆல் ஃபார்மேட் பந்துவீச்சாளர் பும்ரா தெளிவாக சிறந்த வீரர் ஆவார். அவரை அதிகபட்சமாக ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளனர். இரண்டு கேப்டன்கள் - மும்பை அணிக்காக ஹர்திக் மற்றும் இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரையும் ரூ. 16.35 கோடி என இணையான தொகைக்கு தக்கவைத்துள்ளனர்.
இந்தியாவை டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித்தைப் பொறுத்தவரை, அவரை ரூ 16.30 கோடிக்கு தக்கவைத்திருக்கிறது மும்பை.
"உண்மையில் ரோகித் தான் அவர்களின் சமமான-முக்கியமான வீரர்களை ஃபிரான்சைஸிக்கு எளிதாக தரம் பிரிக்கும் சிக்கலான பணியை செய்தார். பும்ரா, ஹர்திக் மற்றும் சூர்யா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள், எனவே அவர்கள் முதல் மூன்று இடங்களில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
சிறந்த தக்கவைப்பு வீரரை தீர்மானிக்கும் போது, ரோகித், சூர்யா மற்றும் ஹர்திக் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்கள். அவர்களுக்குப் பின் பும்ராவாக இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர். அணியில் பும்ராவுக்கு இருக்கும் மரியாதை மற்றும் பக்கத்திற்கு அவரது முக்கியத்துவத்துடன் இது நிறைய தொடர்புடையது." என்று மும்பை அணியின் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஹர்திக்கிற்கு எதிராக அவர் சென்ற மைதாங்கள் முழுதும் முழக்கங்கள் எழுந்தது.
அதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா மும்பை அணியில் விளையாட மாட்டார் என்று கடந்த பல மாதங்களாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. ஆனால் நேற்று மும்பை அணி வெளியிட்ட தங்களது அணி வீரர்களின் பட்டியலில் தக்க வைத்த ஐந்து வீரர்களில் ரோகித் சர்மாவும் இடம் பிடித்திருக்கிறார்.
இது பற்றி பேசுகையில், கேப்டன் பதவி மாற்றம் தீர்வாகாது என்று அணி நிர்வாகம் நினைத்தது. எனவும், நாங்கள் மாற்றத்தை செய்திருந்தால், அது மூன்று ஆண்டுகளில் மூன்று கேப்டன்களாக இருந்திருக்கும். அது வேலை செய்திருக்காது, ”என்றும் மும்பை அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தற்செயலாக, மும்பை அணி கடைசியாக பதிவு செய்தவர் சூரியாகுமார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபிரான்சைஸ் அணிகள் அவரை கவர்ச்சியான சலுகைகளுடன் துரத்தியுள்ளன. ஆனால் அவர் அவற்றுக்கு பின்னால் செல்லக்கூடாது என்பதை முடிவு செய்துள்ளார். “அது மட்டுமல்ல, டிரஸ்ஸிங் ரூம் சூழலை கச்சிதமாக வைத்திருப்பதைத் தானே எடுத்துக்கொள்வதாக அவர் எங்களிடம் கூறியுள்ளார். நாள் முடிவில், இந்த வீரர்கள் நீண்ட காலமாக ஒன்றாக உள்ளனர், மேலும் கடந்த சீசனுக்கான திருத்தங்களைச் செய்ய அவர்கள் அணிகளில் சேர விரும்பினர், ”என்று அவர் கூறினார்.
சுருக்கமாகச் சொல்வதானால், அதிக 5 ஐபிஎல் பட்டங்களை வென்ற நகரத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் ஆர்வத்தில் காயமடைந்த வீரர்களின் ஒரு கூட்டமே அதன் சிறந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள மும்பைக்கு வேலை செய்தது. தக்கவைத்த பிறகு பேசிய ரோகித், “நான் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய இடம் இதுதான். எனவே, இது மிகவும் சிறப்பு வாய்ந்த நகரம், நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“