Advertisment

2 ஓவரில் 4 விக்கெட்... சேப்பாக்கத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மான் தாக்கத்தை ஏற்படுத்தியது எப்படி?

தனது முதல் 10 பந்துகளில் ஃபிஷ் (முஸ்தாபிசுர் ரஹ்மான்) ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ரஜத் படிதார், விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்.சி.பி-யின் டாப்-ஆர்டரை சரித்தார்.

author-image
WebDesk
New Update
How Mustafizur Rahman made an impact at Chepauk CSK vs RCB Tamil News

சென்னை அணி இந்த ஐ.பி.எல் 2024 தொடருக்கு முன்னதாக நடந்த மினி ஏலத்தில் ரஹ்மானை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | Mustafizur Rahman | CSK vs RCB | IPL 2024: 'ஃபிஷ்' - குளிர் பானங்களை நன்கு குலுக்கிய பின் அதன் மூடியைத் திறந்தால் முறை தள்ளப் பொங்கி வரும். இப்படி வருவதை ஆங்கிலத்தில் ஃபிஷ் என்பார்கள். அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்சின் ஐ.பி.எல் 2024 தொடக்க ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக ஜொலித்த வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் செல்லப் பெயரும் ஃபிஷ் தான். 

Advertisment

அந்த வகையில், நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் ஃபிஷை எடுக்க முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு முதல் 10 பந்துகள் தான் தேவைப்பட்டது. அவர் அந்த 10 பந்துகளில் அவர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ரஜத் படிதார், விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். ரஹ்மானின் பந்துவீச்சு ரிதத்தில் ஆர்.சி.பி-யின் டாப்-ஆர்டர் சரிந்து போக, அடுத்த ஒரு மணி நேரத்தில்  ஏ.ஆர் ரஹ்மான் பாடலுக்கு சி.எஸ்.கே ரசிகர்கள் சேப்பாக்கத்தில் நடனமாடிய மகிழந்தனர். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs RCB: How Mustafizur Rahman made an impact at new home Chepauk

சென்னை அணி இந்த ஐ.பி.எல் 2024 தொடருக்கு முன்னதாக நடந்த மினி ஏலத்தில் ரஹ்மானை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது. அவர் சென்னை அணியின் சூழலுக்கும், இங்குள்ள ஆடுகள நிலைமைகளுக்கு சரியாக இருப்பார் என எண்ணி அவரை அணி நிர்வாகம் வாங்கியது. அவருடன், ஏற்கனவே ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி ஆகியோரையும் அணி நிர்வாகம் வாங்கி இருந்தது. ஆனால் ரஹ்மானை ஏலத்தில் வசப்படுத்தியது தற்போது அணி பெரும் சாதனை படைக்க உதவியது. மேலும், எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சென்னை ஆடுகளத்தில், தன்னால் எதிரணிக்கு என்ன விதமான சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் வெளியுலகிற்கு காட்டினார்.

பெரும்பாலும் கட்டர்களை வீசும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் பந்தின் வேகத்தை பயன்படுத்தி, பேட்ஸ்மேன்களை கிரீஸை விட்டு வெளியே நகராத அளவிற்கு, அவர்களை அங்கேயே விட்டுவிடக்கூடிய அந்த லெந்தில் வீசுகிறார். இவை அனைத்தும் டி20களில் ரஹ்மானை முக்கிய வீரராக ஆக்குகின்றன. தற்போதைய ஐ.பி.எல்-லில் இதுவரை ஆறு சீசன்களில் விளையாடியுள்ள அவர், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 4 வெவ்வேறு அணிகளின் சொந்த மைதானங்களில் ஆடியுள்ளார். ஆனால், இந்த சீசனில் சென்னையில் ஆடிய ஒரே ஒரு ஆட்டத்தில், அவர் தனது சொந்த மைதானத்தில் பவுலிங் செய்வதைப் போல் இருக்கிறார் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. அவரது பந்துவீச்சு பாணிக்கு உதவும் மைதானம் ஏதேனும் இருந்தால், அதில் சேப்பாக்கத்தைத் தாண்டிப் பார்ப்பது மிகக் கடினம் எனலாம்.

டாக்கா - சேப்பாக்கம்: ஒரே மாதிரி நிலைமைகள்

நேற்றைய போட்டியில், ஒரு புதிய ஆடுகளத்தில், ரஹ்மான் டாக்காவின் நிலைமைகளுக்கு நெருக்கமாக இருப்பதை உணர்ந்திருப்பார். அவர் இங்கு அசாதாரணமான எதையும் செய்யவில்லை. ஐந்தாவது ஓவரில் அவர் பந்துவீச வந்தபோது, ​​"ஆர்.சி.பி, ஆர்சிபி" என்ற கோஷங்கள் கூட காற்றை சிறிது நேரத்தில் நிரப்பின. ஆர்.சி.பி அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதல் நான்கு ஓவர்களில் 7 பவுண்டரிகள் அடித்து அச்சறுத்தலாக இருந்தார்.

ரஹ்மான் வீசிய இரண்டாவது பந்திலலும் அவர் பவுண்டரி அடித்தார். அடுத்ததாக, ருதுராஜ் கெய்க்வாட் அவருக்கு ஒரு பீல்டருடன் பாதுகாப்பு அளித்தார், அவர் அந்த லெக் கட்டரை வெளியே கொண்டு வந்தார். அருமையாக அடித்த டு பிளெசிஸ், ஸ்டிரோக் ஆரம்பத்திலேயே, தவறான ஷாட்டை ரச்சின் ரவீந்திரன் முன்னோக்கி டைவிங் செய்து கேட்ச் செய்தார். அடுத்து ரஹ்மான் ரஜத் படிதாருக்கு எதிராக தனது வேகத்தை அதிகரித்து விக்கெட்டை கைப்பற்றினார். படிதார் மெதுவான பந்திற்கு காத்திருந்த நிலையில், அதிவேகத்தில் வந்த பந்தை தனது போட்டால் தொட முயன்று எட்ஜ் விட, அதனை விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி லாவகமாக பிடித்தார். 

அங்கிருந்து சென்னை அவரை சாமர்த்தியமாக பயன்படுத்தியது. அவர் ஒரு ஸ்பெல் பந்து வீச்சாளர் அல்ல என்பது கேப்டன்களுக்கு இதுபோன்ற ஆடம்பரங்களை அனுமதிக்கிறது. அடுத்து அவர் விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் விக்கெட்டையும் கைப்பற்றினார்.கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அவருக்கு மீதமிருந்த 3 ஓவர்களையும் டெத் ஓவர்களில் பயன்படுத்தாமல், 12வது ஓவரில் ஆர்.சி.பி அணியை 76/3 என்ற நிலைக்கு கொண்டு வர அவரை மீண்டும் பந்துவீச அழைத்தார். 

தனது முதல் ஓவரைப் போலவே அடுத்த ஓவரில் ரஹ்மான் கலக்கினார். இரண்டாவது ஓவரில், அஜிங்க்யா ரஹானே மற்றும் ரச்சின் இணைந்து டீப் கவரில் கேட்ச் எடுக்க கோலி வீழ்ந்தார். மேலும் அந்த ஓவரின் நான்காவது பந்தில், ரஹ்மானுக்கு எதிராக எந்த பேட்ஸ்மேனும் செய்யாத பாவத்தை கிரீன் செய்தார். அதாவது, ரஹ்மானுக்கு எதிராக ஆஃப்-சைடில் கிடைமட்டமாக ஷாட் ஆடுவது ஆபத்தில் தான் முடியும். ஏனென்றால்,  அவர் பேட்ஸ்மேன் நகர்வை கணித்து பந்தை டெலிவரி செய்யும் கடைசி நேரத்தில் பிட்ச் செய்ய வேண்டிய இடத்தை மாற்றக்கூடியவர். 

அதையே கிரீன் செய்ய முயலுகையில், ரஹ்மான் பந்தை அவுட்சைடு லெக் இடத்தில் இறக்கிவிட்டார். லெக்-கட்டராக மாறிய அந்தப் பந்து கேமரூன் கிரீனுக்கு பின்புறம் இருந்த லெக்-ஸ்டம்பை பதம் பார்த்தது. அவரது விக்கெட்டுக்குப் ஜோடி அமைத்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஜோடி, 78/5 என்ற நிலையில் இருந்த அணிக்கு 50 பந்துகளில் 95 ரன்களை எடுத்து, அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஹ்மான் வீசிய அடுத்த இரண்டு ஓவர்களில், குறிப்பாக டெத் ஓவரின் போது (17வது மற்றும் 19வது), ராவத் மற்றும் கார்த்திக் ஆகியோரிடம்  முறையே 7 மற்றும் 16 ரன்களை விட்டுக்கொடுத்து, மீண்டும் தனது பலத்தை வெளிப்படுத்தினார். 

கடந்த சீனில் கோப்பை வென்ற சென்னை அணியில் இடம் பிடித்த இலங்கையின் மதீஷா பத்திரனா ஃபிட்டாக இருந்திருந்தால், ரஹ்மான் இங்கே பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருப்பார். ஆனால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா காயத்தில் இருந்து மீண்டு, போட்டியின் இரண்டாவது பாதியில் மட்டுமே அணியுடன் இணைவார். அவருக்குப் பதிலாக வந்த ரஹ்மான் சென்னை அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துவிட்டார். நிச்சயமாக, மே மாதத்தில் இங்குள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும், அது ரஹ்மான் விக்கெட் வீழ்த்திட இன்னும் எளிதாக இருக்கும், எனினும், அவர் தனது தேசிய அணியில் விளையாட இருப்பதால், இந்த சீசனின் பாதியில் சொந்த நாடு திரும்புவார். அதுவரை எதிரணியின் ஃபிஷை எடுத்து  ரசிகர்களை குஷிப்படுத்துவார் ஃபிஷ்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Csk Vs Rcb IPL 2024 Mustafizur Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment