Advertisment

புதிய ஒயிடு விதி... கோலி 48வது ஒருநாள் சதத்தை விளாச உதவியது எப்படி?

புதிய விதியின் படி, தனது ஸ்டம்பை பாதுகாத்த விராட் கோலி, பந்து வீசப்படுதற்கு முன்பு நகர்ந்ததால், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு இல்லை என அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
How New wide law helped Virat Kohli to score his 48th ODI century IND vs BAN WC 2023 Tamil News

கோலிக்கு ஒயிடு வீசப்பட்ட அந்த பந்துக்கு அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு கொடுக்க மறுத்ததது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

worldcup 2023 | india-vs-bangladesh | virat-kohli: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறிய 17வது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகளை மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisment

இதன்படி பேட்டிங் செய்து விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குலதீப், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

தொடர்ந்து 257 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் 48 ரன்னிலும், கில் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேற களத்தில் இருந்த கோலி - ராகுல் ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த ஜோடியில் சதம் விளாசிய  கோலி 103 ரன்களும், ராகுல் 34 ரன்களும் எடுத்தனர். 

இறுதியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இந்தியா (+1.659) 2வது இடத்தில் உள்ளது. அதே 8 புள்ளிகளை எடுத்துள்ள நியூசிலாந்து +1.923 நெட் ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh: New wide law change may have helped Virat Kohli to score his 48th ODI century

புதிய ஒயிடு விதி - கோலி சதம் விளாச எப்படி உதவியது?

இந்த போட்டியில் 42 வது ஓவர் வீசப்பட தொடங்கும் முன் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. அதாவது இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அதேவேளையில், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த கோலி சதம் விளாசும் முயற்சியில் இருந்தார். அவர் சதம் விளாச வேண்டும் என்பதற்காகவே கே.எல் ராகுல் ஒரு கட்டத்தில் ரன்கள் சேர்க்க முயலவில்லை. மாறாக கோலி ரன் சேர்க்க அவருடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து, அவருக்கு ஈடு கொடுத்து ஓடினார்.  

42 வது ஓவர் தொடங்கிய போது கோலி 97 ரன்னுடன் இருந்தார். சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்து சதம் விளாசும் திட்டத்திலும் இருந்தார். ஆனால், அந்த ஓவரை வீச வந்த வங்கதேச அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான நசும் அகமது, முதல் பந்தை லெக் சைடில், அதுவும் கோலியின் காலை ஒட்டி பந்தை குத்தவிட செய்தார். பந்து ஒயிடு சென்றதாக பலரும் நினைக்கையில், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு கொடுக்கவில்லை. 

அடுத்தப் பந்தை கோலி மிடில் திசையில் விரட்டினார். ஆனால் எதுவும் எடுக்கவில்லை. இருப்பினும், நசும் அகமது வீசிய 3வது பந்தை கோலி சிக்சருக்கு பறக்கவிட்டார். அத்துடன் தனது 48 வது சர்வதேச ஒருநாள் சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். கோலி சதம் விளாசியதை அடுத்து புனேவில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் ஆரவாரம் செய்தார்கள். 

இந்நிலையில், கோலிக்கு ஒயிடு வீசப்பட்ட அந்த பந்துக்கு அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு கொடுக்க மறுத்ததது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ கிரிக்கெட்டில் சமீபத்தில்  கொண்டு வரப்பட்ட விதியின் படி தான் ஒயிடு கொடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.  

மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) முந்தைய 22.1.1 பிரிவு விதிப்படி, “ஒரு பவுலர் பந்தை வீசும் போது, அது நோ பால் என அறிவிக்கப்படவில்லை என்றால், நடுவர் அதை வைடு என்று தீர்மானிப்பார்.

22.1.2-ல் உள்ள வரையறையின்படி, பந்து ஸ்ட்ரைக்கர் நிற்கும் இடத்திற்கு ஒயிடாக செல்கிறது. மேலும் இது ஒரு சாதாரண கார்டு பொசிஷனில் நிற்கும் ஸ்ட்ரைக்கருக்கு ஒயிடாக சென்றால் ஒயிடு வழங்கப்படும்.

இருப்பினும், 2022 போட்டியில், எம்.சி.சி விதி 22.1ல் சில மாற்றங்களைச் செய்தது. "நவீன கிரிக்கெட்டில், பந்து வீசப்படுவதற்கு முன், பேட்டர்கள் முன்னெப்போதையும் விட, பக்கவாட்டாக கிரீஸைச் சுற்றி நகர்கிறார்கள்" என்று அதன் அறிக்கையில் தெரிவித்தது.

"பந்து வீச்சாளர் தனது பந்து வீச வரும் போது, ​​பேட்டர் நின்ற இடத்தைக் கடந்து சென்றால், ஒரு பந்து வீச்சு 'ஒயிடு' என்று அழைக்கப்படுவது நியாயமற்றதாக உணரப்பட்டது. எனவே, விதி 22.1 திருத்தப்பட்டுள்ளது. அதனால், பேட்டர் நிற்கும் இடத்திற்கு ஏற்பவே ஒயிடு பொருந்தும். அதாவது, பந்து வீச்சாளர் ரன்-அப் தொடங்கியதில் இருந்து ஸ்ட்ரைக்கர் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாரோ அதே இடத்தில் இருந்தால் அல்லது சாதாரண பேட்டிங் நிலையில் ஸ்ட்ரைக்கரை பந்து கடந்து சென்றால் ஒயிடு வழங்கப்பட மாட்டாது" என்று புதிய தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விதியின் படி, தனது ஸ்டம்பை பாதுகாத்த விராட் கோலி, பந்து வீசப்படுதற்கு முன்பு நகர்ந்ததால், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு இல்லை என அறிவித்தார். அது கோலிக்கு சாதகமாக அமைந்த நிலையில், அவர் சதமடித்து அசத்த உதவியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Worldcup India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment