டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் ரஃபேல் நடால். இவர் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான அவர் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில், 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் மொத்தமாக 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரபேல் நடால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தினார்.
கடந்த செம்படம்பர் மாதம் யு.எஸ் ஓபனில் இருந்து விலகினார், அதாவது 2024 இல் நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றை அவர் தவறவிட்டார். இதேபோல், இந்த ஆண்டு நடந்த பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார்.
63 டென்னிஸ் தொடர் வெற்றிகள், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம், அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரஃபேல் நடால், ஸ்பெயினில் நடந்த டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிதான் அவர் ஆடிய கடைசி போட்டியாகும். இந்தப் போட்டிக்குப் பின் முற்றிலுமாக டென்னிஸ் போட்டியில் இருந்து விலகி இருக்கப்போவதாக அவர் அறிவித்த சூழலில், இப்போட்டியில் அவரை போடிக்
வான் டி சாண்ட்ஸ்சுல்ப் தோற்கடித்தார்.
ஆவணம் படம்
இந்த நிலையில், 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரஃபீல் நடாலின் 2024 சீசனின் அடிப்படையில் ஆவணப்படத் தொடரை நெட்ஃபிலிக்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் முன்னணி வீரரான கார்லோஸ் அல்கராஸ் குறித்தும் இடம் பெற உள்ளது. இது தொடர்பாக நெட்ஃபிலிக்ஸ் நிர்வாகிகள் பேசுகையில், "இந்த ஆவணப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை மற்றும் ஒளிபரப்பு தேதி இல்லாமல் முன்மொழியப்பட்டவில்லை. அவரது (நடாலின்) பயணத்தின் ஒரு நெருக்கமான பார்வையை இது வழங்கும். அவரது பாரம்பரியத்தை இது உறுதிப்படுத்தும்" என்று கூறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“