Corona Virus Update : கொரோனா வைரஸை pandemic (உலகளவில் பரவும் தொற்று) என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில், விளையாட்டு உலகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் விளையாட்டு உலகம் இப்படியொரு மோசமான சூழலை சந்தித்ததில்லை.
கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்டு 9 வரை நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது.
எந்த நம்பிக்கையில் தீபத்தை ஒலிம்பிக் நிர்வாகம் ஏற்றியது என்பது புரியாத புதிராக உள்ளது. எனினும், ஜூலை மாதத்திற்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒலிம்பிக் நிர்வாகம் தொடர்ந்து ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, கொரோனா பாதிப்பால், இதுவரை ஒத்திவைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட விளையாட்டு தொடர்கள் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்,
மார்ச் 16:
கிரிக்கெட்: பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஒரு நாள் சர்வதேச மற்றும் டெஸ்ட் போட்டியை ஏப்ரல் தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கால்பந்து: ஆஸ்திரேலிய ஏ-லீக் சீசனின் இறுதி ஆறு சுற்றுகள் மூடிய கதவுகளுக்குள் விளையாடப்பட உள்ளன.
மார்ச் 15:
பாக்ஸிங்: லண்டனில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள், மார்ச் 24 வரை இயங்கும், மூடிய அரங்கிற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் ஓட்டுதல்: சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் அமைப்பு குறைந்தது ஏப்ரல் 3 வரை அனைத்து நிகழ்வுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கால்பந்து: கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த பின்னர் ஐந்து வலென்சியா வீரர்கள் மற்றும் ஊழியர்கள் "நல்ல ஆரோக்கியத்துடன்" உள்ளனர்.
கால்பந்து: சுவிஸ் கால்பந்து கழகத்தின் தலைவர் டொமினிக் பிளாங்க்கிற்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
கால்பந்து: மெக்சிகோவின் லிகா எம்எக்ஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கால்பந்து: பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு அனைத்து தேசிய போட்டிகளையும் அடுத்த அறிவிப்பு வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
ஃபார்முலா 1: ஃபார்முலா 1 மற்றும் இதர பொது போக்குவரத்து கார் தொழிற்சாலைகளின் உற்பத்தியை ஃபெராரி நிறுத்துகிறது.
நெட்பால்: நெட்பால் சூப்பர் லீக் சீசன் அடுத்த அறிவிப்பு வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ்: அடுத்த வாரம் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டின் தீபம் ஏதென்ஸில் ஏந்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி மூடிய அறைக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (இவ்ளோ அமளி துமளிலயும் அசர மாட்டேங்குறானுங்க பாரேன்!!)
இது வெறும் இரண்டு நாள் நிலவரம் தான், இன்னும், லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிக் கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மிட்சல் மெக்லேனகன், தானாகவே முன்வந்து தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்கள் கட்டாயமாக தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாடு அறிவித்திருக்கும் நிலையில்,ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர், 'வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் உண்மையில் தனிமையில் இருக்கிறார்களா என்று அரசுக்கு எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளனர்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
இந்த விளையாட்டு உலகமே ஜனவரி 22 முதலேயே உஷாராகிவிட்டது. அன்றைய தினமே சீனாவில் நடக்கவிருந்த பாக்ஸிங் மற்றும் கால்பந்து போட்டிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டு விட்டன. அன்று முதல் இன்று வரை படிப்படியாக அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன... இல்லையெனில் மூடிய அரங்குக்குள் பார்வையாளர்களே இன்றி நடைபெறுகின்றன.
கொரோனாவின் கோரத்தில் இனிமேலாவது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.