இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து சேர்ந்தனர். ஜோ ரூட் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உத்வேகத்தில் உள்ளதோடு தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றது.
அந்த அணியில் சிறப்பாக விளையாடி வரும் சாம் கர்ரன், கடந்த ஆண்டு ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினர். இவரை அனைவரும் சுட்டிக் குழந்தை என்று அழைத்தனர். ஐபில் போட்டிகளில் பங்கேற்றது முதல் இறுதி வரை ட்ரெண்டிங்கிலே இருந்தார். "இங்கு சமீபத்தில் அவர் செய்த டிக்- டாக் வீடியோ கூட ட்ரெண்டிங்கில் இருந்தது. சாம் கர்ரன் ஆடுகளத்திலும், வெளியிலும் சிறப்பான மனிதர்" என்று இங்கிலாந்து அணியின் கண்டிஷனிங் பயிற்சியாளர் பில் ஸ்காட் கூறுகிறார்.
இங்கிலாந்து அணியினர் இந்த ஆண்டு 17 டெஸ்ட் போட்டிகளிலும், 19 டி-20 போட்டிகளிலும், 9 ஒரு நாள் போட்டிகளிலும், டி - 20 உலக கோப்பை தொடரிலும் விளையாட உள்னர். எனவே அவர்களை நேர்த்தியாகவும், போட்டிக்கு ஏற்றவாறும் தயாரிக்கும் பொறுப்பில் பில் ஸ்காட் உள்ளார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை வீரர்களை சுழற்சி முறையில் விளையாட வைக்கிறார்கள். அதனால் தான் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ஜானி பேர்ஸ்டோவ் சென்னையில் நடக்கும் இரண்டு போட்டிகளிலும் இல்லை. அதிரடியில் மிரட்டும் ஜோஸ் பட்லர் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுகிறார். மற்றும் ஆல்-ரவுண்டர்களாக கலக்கும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இலங்கையில் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை. இது போன்று வீரர்களை சுழற்சி முறையில் விளையாட வைக்கவும், போட்டிகளுக்கு தயாரிப்பாக வைக்கும் பணியை பில் ஸ்காட் திறம்பட செய்து வருகின்றர்.
வீரர்களை போட்டிக்கு ஏற்றவாறு தயார் செய்வதில் இங்கிலாந்து அணி போல மற்ற எந்த அணியும் ஈடுபாடு காட்டுவதில்லை என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா பெருந்தொற்று தொடங்கிய சமயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதன் வீரர்களுக்கு பயிற்சி செய்ய தேவையான உபகாரணங்களையும், செயல் திட்டத்தையும் வழங்கியது. அதோடு வீரர்கள் தினமும் என்ன என்ன பயிற்சி மேற்கொள்கிறார்கள், என்பதை அவர்களே ஒரு படிவத்தில் நிரப்பி பில் ஸ்காட்க்கு அனுப்ப வேண்டும். அதோடு வீரர்கள் என வகையான உணவு உண்ண வேண்டும் என்பதை அந்த அணியின் ஊட்டச்சத்து நிபுணர் எம்மா கார்ட்னர் பரிந்துரைப்பார்.
"வீரர்கள் எந்த அளவுக்கு கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர் என்பதற்கு அவர்களே மதிப்பெண் வழங்குவர். அதற்கு ஏற்றால் போல் நாங்கள் கணக்கீட்டு கொள்வோம். உணவைப் பொறுத்தவரை அதிக கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. முறையான உணவகளை உண்ணவே பரிந்துரைத்தோம்" என்று ஸ்காட் கூறுகிறார்.
பந்து வீச்சாளர்களுக்கு தனித்துவமான பயிற்சி:
பந்து வீச்சாளர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சி அளிப்பீர்கள் என்று கேட்டபோது, "பந்து வீச்சாளர்களுக்கென தனித்துமான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். எப்போதும் ஓடுவதை விட இரு மடங்கு அதிகம் ஓட வேண்டும். இறுதியில் மெடிசின் பந்துகளை கொண்டு ஸ்லாம் செய்ய வேண்டும். இது போன்ற பயிற்சி வேகப்பந்து வீசுவதற்காக இல்லை. இது அவர்களின் நரம்புத்தசைக் கூறுகளை வலுவாக்க உதவும். அதோடு வேகமாக ஓடி வந்து பந்து வீசும் போது அவர்களின் கால்களுக்கு உறுதியைத் தரும்.
6 முதல் 8 மணி நேரம் வரை வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபடுவதால், அவர்களது உடலில் அதிக அளவு வெப்பம் அடைகின்றது. இது அவர்கள் ஆடுகத்தில் திறம்பட செயல் பட உதவும். இது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு நல்ல பலனை தந்து வருகின்றது. டி-20 போட்டிகள் என்றால் 2 மடங்கு பயிற்ச்சி அதிமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளுக்கு, போட்டி நடக்கும் ஒரு நாளுக்கு முன்னர் பயிற்சி துவங்கும்"
வீரர்களின் மன ஆரோக்கியம்:
இங்கிலாந்து அணி, வீரர்களை மனதளவில் கட்டுக்கோப்பாக வைக்கவும், மன அழுத்தம் ஏற்படாமல் கவனித்து கொள்ளவும் உளவியலாளர்கள் பலரை பயன்படுத்தி வருகின்றது. அவர்களை ஒழுங்கமைக்கும் பணியை அந்த அணியின் சப்போர்டிவ் பயிற்சியாளர் மார்க் சாக்ஸ்பி திறம்பட செய்து வருகிறார். சாக்ஸ்பி இங்கிலாந்து அணியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒரு நபர். அந்த அணியின் வீரர்களை மருத்துவ பயிற்சியாளர்களைச் சந்திக்க வைப்பது, அவர்களுக்கு வித்தியாசமான விடுகதைகளை கூறுவது, சில விடுகதைகளுக்கு 5 பாய்ண்ட் வழங்கி வீரர்களை நடனமாட செய்வது போன்ற பல பணிகளை வீரர்களுக்காக உற்சாகத்துடன் மேற்கொண்டு வருகின்றார். அந்த அணி 2019 உலக கோப்பை வெல்லும் போது ஜோஸ் பட்டலர், அவரை தோளில் தூக்கிக் கொண்டு லார்ட்ஸ் மைதானத்தை சுற்றி வந்தார். அந்த அளவுக்கு அணியில் உள்ள வீரர்களின் மனதிலும் சாக்ஸ்பி இடம் பிடித்துள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி:
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட இயலவில்லை. அதற்கு காரணமாக, முறையில்ல பயிற்சி, கொரோனா தொற்றின் போது உடற்தகுதியை மேம்படுத்தாதது போன்றவற்றை குறிப்பிடுகின்றனர். ஆனால் இதில் இங்கிலாந்து அணி மிகக் கவனமாக செயல்பட்டு வருகின்றது.
"இங்கிலாந்தில் உள்ளது போல இலங்கையில் புல்வெளி தளங்கள் காணப்படவில்லை என்றாலும், எங்களால் எந்த அளவுக்கு முயற்சி செய்து பயிற்சி மேற்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு செய்தோம். அந்த மைதானங்களும் ஒத்துழைப்பை வழங்கின. அங்கு நடந்த போட்டிகளில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். இரண்டு போட்டிகளுப் பிறகும் வீரர்கள் நல்ல உடற்தகுதியிலே உள்ளனர். இதுவரை எந்த வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணமும் அந்த வகையில் அமையும் என்று நம்புகிறோம்" என்று
ஸ்காட் கூறிகிறார்.
பில் ஸ்காட் இங்கிலாந்து அணியில் 2014-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றார். 2019-ம் ஆண்டு அந்த அணி உலக கோப்பையை வென்றதில் ஸ்காட்க்கும் பங்கு உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.