Cricket IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) இடையே நடைபெறும் ஐபிஎல் 17வது தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள், Paytm இன்சைடரில் திங்கள்கிழமை (மார்ச் 18) காலை 9:30 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.
ரசிகர்களுக்கு, மைதானத்திற்குள் நுழைவதற்கு இ-டிக்கெட்டுகள் அனுமதிக்கப்படும், எனவே அவர்கள் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
மார்ச் 22 ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில், CSK மற்றும் RCB இடையேயான போட்டியின், தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது.
CSK vs RCB டிக்கெட் விற்பனை விவரங்கள்
பொதுத் தேர்தல் தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாலும், வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக நாட்டில் நடைபெறும்.
“முழுமையான ஐபிஎல் இந்தியாவில் மட்டுமே நடக்கும். பிசிசிஐ இப்போது முழு அட்டவணையில் செயல்பட்டு வருகிறது, விரைவில் அது அறிவிக்கப்படும், ”என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையுடன் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2019 பொதுத் தேர்தலின் போது பிசிசிஐ இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது, ஆனால் ஐபிஎல் இந்தியாவில் நடைபெற்றது.
மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான முதல் 21 ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையில், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ விரைவில் இறுதி செய்யும் என்று, ஷா செய்திக்குறிப்பில் கூறியிருந்தார்.
Read in English: Cricket IPL: How to book IPL 2024 tickets for opener between CSK and RCB
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“