scorecardresearch

சென்னையில் சி.எஸ்.கே போட்டிகள்: டிக்கெட் பெறுவது எப்படி?

சென்னை சேப்பாகம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டை நாளை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் முதல் முன்பதிவு செய்யலாம்.

csk

சென்னை சேப்பாகம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டை நாளை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும்  முதல் முன்பதிவு செய்யலாம்.

கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 3 திங்கள்கிழமை நடைபெறுகிறது. லக்னோ சுப்பர் ஜெயன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ்-யின் இரண்டாவது போட்டியாக இருக்கும்.

இந்நிலையில் இந்த போட்டியை காண விரும்பும் பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை  நாளை முதல் முன்பதிவு செய்யலாம். நாளை காலை 9.30 மணி முதல் முன்பதிவு தொடங்கிறது. PAYTM, www.insider.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட் புக் செய்ய முடியும்.

மேலும் சேப்பாக்கம் விளையாடு மைதானத்தில்  உள்ள இரண்டு டிக்கெட் கவுன்டருக்கு நேரடியாக சென்றும் டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

டிக்கெட் விலை: சி/டி/இ லோயர் – ரூ 1, 500 – நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தால்.   டி/இ அப்பர் (upper)  – ரூ.3,000 வசூலிக்கப்படுகிறது ( ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால்)

இந்நிலையில் BookmyShow மூலம் எப்படி டிகெட் முன்பதிவு செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

  • BookmyShow-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • லாகின் செய்துகொள்ள வேண்டும்.
  • தற்போதைய location-ல் சென்னையை தேர்வு செய்ய வேண்டும்.
  • IPL 2023 என்ற ஆப்ஷனை ’The Best of Live Events’ என்பதிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • ஐபிஎல் கேமை தேர்வு செய்யவும்.
  • விளையாட்டு மைதானத்தின் புகைப்படத்தில் எத்தனை இருக்கைகள் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து ‘book ‘ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து புக் செய்ய வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: How to book tickets for chennai csk match at chepauk stadium