Travis Head | T20 World Cup 2024 | India Vs Australia: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், இந்திய அணி அதன் கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதுவும் பலரும் பொருந்திய ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
இந்திய மண்ணில் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது. அதற்கு பழி தீர்க்க இந்திய அணிக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை கச்சிதாக பயன்படுத்திட இந்தியா நினைக்கும். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் பெரும் தலைவலி கொடுத்தார்.
ஆனால், அவர் நடப்பு தொடரில் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை என்றாலும் அணிக்கு தேவையான ரன்களை குவித்து மிரட்டி இருக்கிறார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் ஒரு அரைசதத்துடன் அதிகபட்சமாக 179 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவரது விக்கெட்டை எப்படி வீழ்த்தலாம் என்பது இங்கு பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How to trap Travis, as Rohit Sharma and Co take on Australia in huge T20 World Cup match
வேகப்பந்து வீச்சாளர்களில் இடது கையில் வீசுபவர்கள் ஓவர் தி ஸ்டம்ப் பகுதியில் இருந்து வீச வேண்டும். அதேநேரத்தில், வலது கையில் இருந்து வீசுபவர்கள் அரவுண்ட் தி ஸ்டம்ப் பகுதியில் இருந்து வீச வேண்டும்.
அவர்கள் குட் மற்றும் ஃபுல் லென்த் பந்துகளுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக பந்துகள் அவரை விட்டு விலகிச் செல்லும் வகையில் வீச வேண்டும். அதனை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் செய்து காட்ட முடியும்.
மற்ற பவுலர்களிடம் இருந்து கிடைத்த உதாரணங்கள்:-
நவீன்-உல்-ஹக்:
டிராவிஸ் ஹெட்டுக்கு நவீன்-உல்-ஹக் பந்துவீசும் போது, அவர் பந்தை அரவுண்ட் ஸ்டெம்ப் பகுதியில் (ஸ்டம்பைச் சுற்றி வந்து), வலது கையிலிருந்து பந்து அவருக்குள் ஸ்விங் ஆகும் படி வீசுகிறார். பந்து வீச்சாளரின் தலைக்கு மேல் இருக்கும் ஹெட் அடிக்க மட்டையை விளாசுகிறார். ஆனால் அவரால் பந்து பிட்ச் ஆகும் இடத்த பேட்டைக் கொண்டு அடைய முடியவில்லை. மிக முக்கியமாக அவர் பந்து சீம் ஆகி வெளியேறுவதை கணிக்க முடியவில்லை. அதனால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
KNOCKED HIM OVER! 😮💨
— Star Sports (@StarSportsIndia) June 23, 2024
A dream delivery by #NaveenulHaq and #TravisHead is bowled! 🔥
𝐒𝐔𝐏𝐄𝐑 𝟖 👉 #AFGvAUS | LIVE NOW | #T20WorldCupOnStar (available only in India) pic.twitter.com/u6tUW6dGBL
ஜோஃப்ரா ஆர்ச்சர்:
இந்த முறை, அவர் முந்தைய பந்தைப் போலவே ஸ்டம்பிலிருந்து லெக்-சைடுக்கு நகர்ந்தார். அவரது முன் காலை நகரத்தி, கவர்களுக்கு மேல் பந்தை விளாசப் பார்த்தார். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஆஃப்-கட்டர் விரைவாக பிட்ச் மீது குத்தி விட்டு ஹெட்டை விட்டு விலகியது. மேலும், வேகம் இல்லாத அந்தப் பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
மிட்செல் ஸ்டார்க்:
ஐ.பி.எல்.லில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, காற்றில் வளைந்தது. அப்போது ஸ்வீப் ஷாட் ஹெட் முற்பட்டார். ஆனால், அவரை ஏமாற்றி பந்து ஸ்விங் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. பந்தை தவறாக கணித்து விட்டதாக ஹெட் குழம்பிப் போனார். இந்தப் பந்து எந்தவொரு இடது கை பவுலருக்கும் இடது கை பேட்ஸ்மேனுக்கு வீசும் கனவுப் பந்து.
Starc sets the tone for Qualifier 1 with a ripper! 🔥#IPLonJioCinema #TATAIPL #KKRvSRH #TATAIPLPlayoffs #IPLinBengali pic.twitter.com/3AJG5BvZwT
— JioCinema (@JioCinema) May 21, 2024
அர்ஷ்தீப் சிங்:
ஐ.பி.எல் தகுதிச் சுற்றில் ஸ்டார்க் பந்தைப் போல், அது அவருக்குள் வளைந்து, சுழன்று ஸ்டம்பில் அடிக்க சறுக்கியது. அப்போது பந்தை ஹெட் தடுத்து ஆட நினைக்கையில், அவர் தாக்குப்பிடிக்கவில்லை. பந்து அவரை நிலைகுலைய வைத்து, ஸ்டெம்பை பதம் பார்த்தது.
Talk about a spectacular start!
— IndianPremierLeague (@IPL) May 19, 2024
A BEAUT of a delivery from Arshdeep Singh to get things going! ❤️💪
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #SRHvPBKS | @arshdeepsinghh | @PunjabKingsIPL pic.twitter.com/WInHujNQ8P
கேட்ச் தவான்; பவுலிங் அர்ஷ்தீப்:
இந்த முறை, அவர் பந்து வீச்சாளரின் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்றார். பந்து ஃபுல் ஒயிடாக இருந்தது, ஆனால் அர்ஷ்தீப்பின் அவே-ஸ்விங் தந்திரத்தை செய்தார். அவர் தனது வடிவத்தை இழந்தார், அரை கண்ணியமான இணைப்பைப் பெறத் தவறிவிட்டார், மேலும் பந்தை மிட்-ஆஃப்-க்கு சற்று பின்னால் கட் செய்தார். மீண்டும், அதே பழைய குறைபாடுகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.