/indian-express-tamil/media/media_files/2025/04/29/YJ5QsrcvTWwHeYuBKCYj.jpg)
சாதனை நாயகன் சூர்யவன்ஷியை செதுக்கிய 2 ஜாம்பவான்கள் யார் யார்?
பி.சி.சி.ஐ-யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் சேலஞ்சர் போட்டி வைபவ் சூரியவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்த போட்டி எனலாம். விவிஎஸ் லட்சுமண் அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கு அவரைத் தேர்ந்தெடுத்தார்.
“ஒரு ஆட்டத்தில் வைபவ் சூரியவன்ஷி 36 ரன்களுக்கு ரன்அவுட் ஆனார். அதனால், அவர் டிரஸ்ஸிங் ரூமில் அழத்தொடங்கினார். இதைப்பார்த்த லட்சுமண், அவரிடம் வந்து, ‘இங்கே ரன்களை மட்டும் பார்க்கவில்லை. நீண்ட ரன் எடுக்கும் திறமை உள்ளவர்களை நாங்கள் பார்க்கிறோம் என்றார். சூரியவன்ஷி திறமை கண்டறிந்த லட்சுமண், பிசிசிஐ அவருக்கு ஆதரவளித்து உள்ளது என்று அவரது பயிற்சியாளர் மனோஜ் ஓஜா ஸ்போர்ட்ஸ்டாரிடம் தெரிவித்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பயிற்சியாளர், சூரியவன்ஷி தனது தொழில் வாழ்க்கையின் நலனுக்காக பீகாரிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல விரும்புவதாகப் பேசியிருந்தார்.
"பீகார் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்றதல்ல. யாருக்கும் கவலை இல்லை. பிசிசிஐயும் அதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விட்டது. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்போது இது கடினமாகி வருகிறது," என்று வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனோஜ் ஓஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
"ஒரு பயிற்சியாளராக, அவர் உடனடியாக பீகாரை விட்டு வேறு மாநிலத்திற்காக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சிறந்த ரஞ்சி அணிகள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் ஒரு மாநிலத்திற்காக விளையாட வேண்டும்." என்றார்.
வைபவ் சூரியவன்ஷியின் பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு லக்ஷ்மண் பரிந்துரை செய்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. டிராவிட் அவரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இந்த ஐபிஎல்லில் அவருக்கு ஒரு ஆட்டத்தை வழங்க தனது நேரத்தை எடுத்துக் கொண்டார்.
“அவர் மிகவும் நன்றாக பயிற்சி செய்கிறார், அவர் மிகவும் நல்ல மற்றும் உற்சாகமான திறமைசாலியாகத் தெரிகிறார், ஆனால் அதே அளவு நல்ல வீரர்களும் இருக்கிறார்கள், அவரை நன்றாக வளர்ப்பது, சூழலில் அவருக்கு சிறிது நேரம் கொடுப்பது, அவர் அதற்குப் பழகி வீரர்களுடன் பயிற்சி செய்வது, சூழலை உணர வைப்பது எங்கள் பொறுப்பின் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் அவருக்கு சிறந்த அனுபவங்கள். எனவே இது ஒரு வீரரை வளர்ப்பதில் நாம் பின்பற்றும் செயல்முறையின் ஒரு பகுதியாகும், ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரை விளையாட நாங்கள் பயப்பட மாட்டோம்,” என்று மார்ச் 30 கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.