இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா மேற்கிந்திய தீவுகளை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் தங்களது அணியினை வெளியிட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் ஒரு நாள் அணியில் இடம் பெறவில்லை.
இவர் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்ளூர் டி 20 போட்டியில் விளையாட உள்ளார். கெயில் நேற்றுடன் (7.10.18) முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கமாட்டார். அதே நேரத்தில் 2019 உலக கோப்பைக்கு முன் இங்கிலாந்துடன் அதன் சொந்த மண்ணில் நடக்கும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளார்.
இவரை தவிர்த்து, இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகின்ற டேரன் பிராவோ மற்றும் பொல்லார்ட்டுக்கு டி-20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொல்லார்ட் கடைசியாக செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு டி-20 அணியில் இடம்பெற்றார். பிராவோ 2014 ஆம் ஆண்டு கடைசியாக டி-20 அணியில் இடம்பெற்றார்