New Update
00:00
/ 00:00
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளர்கள். மேலும், அவர்களின் தாயக வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டி நடந்த பார்படாஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெரில் எனப்படும் புயல் (வகை 4) உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, புயலின் மையம் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் உள்ளது.
வாஷிங்டன் போஸ்ட்டின் அறிக்கையின்படி, பெரில் புயல் 130 மைல் வேகத்தில் காற்று வீசும் விண்ட்வார்ட் தீவுகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்படாஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் தி கிரெனடைன்ஸ், கிரெனடா மற்றும் டொபாகோ தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரில் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஹில்டன் ஹோட்டலில் தங்கியுள்ளது. நிலைமை சரியானதும் இந்திய அணி தனி விமானம் மூலம் நாடு திரும்புவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகவே புறப்பட்டது சென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.